சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, இந்தியத் தேர்தல் ஆணையமானது (ECI) சந்தீப் ராய் ரத்தோரை ஜி. வெங்கட்ராமனுக்குப் பதிலாக காவல்துறை தலைமை இயக்குநராகவும் (DGP) மற்றும் காவல் படைத் தலைவராகவும் (HoPF) நியமித்துள்ளது.
தேர்தல் தொடர்பான அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்று நடத்துவதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு 'தேர்தல் டிஜிபி'யை நியமித்த போதிலும், மாநிலத்தில் நிரந்தரமான 'படைத் தலைவரே' (HoPF) இல்லாத காரணத்தினால், திரு. ரத்தோர் டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.
தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் (NCBC) தலைவராக நிரஞ்சன் ஜோதி மற்றும் உறுப்பினராக கிரண் உமேஷ் மஹல்லே ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மதியிறுக்கப் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு, அங்கீகாரம் மற்றும் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 அன்று உலக மதியிறுக்க பாதிப்பு விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “Autism and Humanity – Every Life Has Value” என்பதாகும்.