TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 5 , 2026 15 hrs 0 min 40 0
  • 4 முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு, நான்கு வகையான டெங்கு வைரஸ்களுக்கும் எதிராகப் பாதுகாப்பு அளிக்கும் 'Qdenga' (TAK-003) தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.
  • வருமான வரித் தாக்கல், இணக்கம், மின்னணு வழி-சரிபார்ப்பு மற்றும் குறைகளைத் தீர்க்க உதவும் வகையில் கர் சாத்தி என்ற செயற்கை நுண்ணறிவு சார்ந்த சாட்பாட் தளத்தை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மியான்மர் நாட்டின் நாடாளுமன்றத்தால் அந்நாட்டின் அதிபராக மின் ஆங் ஹ்லேங் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • 2027 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான தூதராக பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கை இந்திய அரசு நியமித்துள்ளது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான தீன் தயாள் உபாத்யாய் மற்றும் நானாஜி தேஷ்முக் பஞ்சாயத்து சதத் விகாஸ் புரசுகார் விருதுகளில் திரிபுராவின் செபாஹிஜாலா (சிறந்த மாவட்ட பஞ்சாயத்து), காஞ்சாபாரி (ஆரோக்கியமான பஞ்சாயத்து - முதலிடம்), மற்றும் வைகுந்தபூர் (பெண்கள் நட்புசார் பஞ்சாயத்து - மூன்றாமிடம்) ஆகிய மூன்று பஞ்சாயத்துகள் முதன்மையான விருதுகளை வென்றுள்ளன.
  • குடியரசுத் துணைத் தலைவர் C. P. ராதாகிருஷ்ணன், சம்விதான் சதனிலுள்ள 58 சுவரோவியங்களை இந்தியாவின் நாகரிகச் சின்னங்களாக விளக்குகின்ற, சுதா மூர்த்தி எழுதிய “Tides of Time” என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
  • 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 அன்று வட அட்லாண்டிக் ஒப்பந்தம் கையெழுத்தானதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 4 அன்று நாட்டோ (NATO) தினம் அனுசரிக்கப் படுகிறது.
  • இந்தியாவின் கடல்சார் பாரம்பரியம் மற்றும் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில் ஏப்ரல் 5, 2026 அன்று தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்படுகிறது.
    • 2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு, "Maritime India – Empowering Progress" என்பதாகும்.
  • அமைதி மற்றும் தார்மீக விழுமியங்களை மேம்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 5 அன்று சர்வதேச மனசாட்சி தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு, "Together for Peace: From Conscience to Collective Action" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்