ஒடிசா மற்றும் உத்தரகாண்ட் மாநிலக் காவல்துறையினருக்கு இந்தியாவின் உயரிய கௌரவமான குடியரசுத் தலைவரின் காவல்துறை வண்ண விருது வழங்கப் பட்டு உள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் இந்தியக் கடற்படையின் 'புராஜெக்ட் 17A' திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நான்காவது போர்க்கப்பலான INS தாராகிரி என்ற அதிநவீன மறைந்து தாக்கும் போர்க்கப்பலை மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்தியாவின் 3வது அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான INS அரிதாமன் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
மும்பையில் நடைபெற்ற ஏலத்தில் ₹167.20 கோடிக்கு விற்பனையான ராஜா ரவி வர்மாவின் "யசோதாவும் கிருஷ்ணரும்" என்ற ஓவியம் இந்தியாவில் அதிக விலைக்கு விற்கப்பட்ட ஓவியம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
குழந்தைகளிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ம் தேதி 'சர்வதேச குழந்தைகள் புத்தக தினம்' கொண்டாடப்படுகிறது.
அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதில் விளையாட்டின் பங்கை முன்னிலைப் படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 6 ஆம் தேதி 'சர்வதேச வளர்ச்சி மற்றும் அமைதிக்கான விளையாட்டு தினம்' அனுசரிக்கப்படுகிறது.
2026-ம் ஆண்டிற்கான கருத்தரு, "Sport: Building Bridges, Breaking Barriers" என்பதாகும்.