TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 7 , 2026 15 hrs 0 min 55 0
  • உணவு மற்றும் உயிரித்தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் BIRAC (உயிரித்தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவி மன்றம்)-BioNEST காப்பகம்/வளர்ப்பு மையத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
  • பாதுகாப்புத்துறை கொள்முதல் சபையானது (DAC), காதக் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படைக்காக மறைந்து தாக்கும் திறன் கொண்ட ஆளில்லா போர் விமானங்களை (UCAVs) கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
    • காதக் UCAV என்பது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (DRDO) உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு ஆளில்லா போர் விமானம் ஆகும், இது முன்னதாக AURA (தன்னிச்சையான ஆளில்லா ஆய்வக விமானங்கள்) என்று அழைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்