TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 8 , 2026 4 days 78 0
  • இந்திய ரயில்வேதுறையானது, நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக ஜவஹர்லால் நேரு துறைமுக முனையத்திலிருந்து தாத்ரி வரை இணைக்கும் 1,506 கி.மீ நீளமுள்ள மேற்கத்திய பிரத்தியேக சரக்கு வழித் தடத்தை நிறைவு செய்துள்ளது.
  • உலக அளவில் சீனா மிகப்பெரிய மெட்ரோ வலையமைப்பைக் கொண்டுள்ளது (~11,000 கி.மீ), இதனைத் தொடர்ந்து அமெரிக்கா (~1,400 கி.மீ) மற்றும் இந்தியா (~1,100 கி.மீ) ஆகிய நாடுகள் உள்ளன.  
  • ஒடிசாவின் பூரியில் முன்மொழியப்பட்ட ஸ்ரீ ஜெகந்நாத் சர்வதேச விமான நிலையம், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திடமிருந்து முதற் கட்ட வனத்துறை அனுமதியைப் பெற்றுள்ளது.
    • இந்தத் திட்டத்திற்காக சுமார் 27.886 ஹெக்டேர் வனப்பகுதியை மாற்றியமைக்க 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று அனுமதி வழங்கப்பட்டது.
  • கேரட்டின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 4 அன்று சர்வதேச கேரட் தினம் 2026 கொண்டாடப்படுகிறது.
  • 1971 ஆம் ஆண்டு ஐக்கியப் பேரரசில் நடைபெற்ற முதல் உலக ரோமானி காங்கிரஸைக் குறிக்கும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 8 அன்று சர்வதேச ரோமானி தினம் கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்