TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 9 , 2026 3 days 59 0
  • உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் உள்ள தபால் பயிற்சி மையத்தின் 75 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் ஒரு நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
  • 2025-26 ஆம் நிதியாண்டில் 6.05 கிகாவாட் (GW) என்ற மிக உயர்ந்த காற்றாலை மின் உற்பத்தித் திறன் கூடுதலை இந்தியா பதிவு செய்துள்ள நிலையில் நாட்டின் மொத்த காற்றாலை மின் திறன் 56 கிகாவாட்டைக் கடந்துள்ளது.
  • CBI (மத்தியப் புலனாய்வுப் பிரிவு) முன்னாள் இயக்குனர் ஆர்.கே. ராகவனின் சுய சரிதையான "A Road Well Travelled" சென்னையில் வெளியிடப்பட்டது.
  • பழங்குடியின கலாச்சாரம், கைவினைப்பொருட்கள் மற்றும் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக மத்தியப் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப் பட்ட பாரத் பழங்குடியினர் திருவிழா 2026 ஆனது புதுதில்லியில் நடைபெற்றது.
  • உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் வீராங்கனையான திவ்யா சிங், நேபாளத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,364 மீட்டர் உயரத்தில் உள்ள எவரெஸ்ட் அடிவார முகாமுக்கு 14 நாட்களில் மிதிவண்டியில் சென்று சாதனை படைத்தார்.
  • பாங்காக் நகரில் நடைபெற்ற உலக பாரா வில்வித்தை தொடரின் இறுதிப் போட்டியில், சர்வதேச வில்வித்தை போட்டியில் தங்கம் வென்ற உலகின் முதல் நான்கு உடல் உறுப்புகளையும் இழந்த (quadruple amputee) வீராங்கனை என்ற பெருமையை பாயல் நாக் பெற்றார்.
  • மனிதன், விலங்கு மற்றும் சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தை இணைத்து உலகளாவிய சுகாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் 2026 ஆம் ஆண்டின் 'One Health' உச்சி மாநாடானது, G7 தலைமையின் கீழ் பிரான்சின் லியோன் நகரில் நடைபெற்றது.
  • 2026 ஆம் ஆண்டின் இந்திய தடகளத் தொடரில், முரளி ஸ்ரீசங்கர் 8.15 மீட்டர் தூரம் தாண்டி ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் வெற்றி பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்