இந்தியத் தேர்தல் ஆணையமானது தமிழகத்தில் அதிரடி மாற்றங்களை மேற் கொண்டுள்ளதன்படி தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக எம். சாய் குமார் அவர்களும், காவல்துறை தலைமை இயக்குநராக (ஆயுதப்படை மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை - DVAC) சந்தீப் மிட்டல் அவர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகம் உலகின் முதல் 10G (10 ஜிகாபிட்) U6GHz இணையச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிர்லா மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனம் (BIMTECH) நடத்திய 'ஹெர்ம்ஸ் உரையாடல் 6.0' என்ற விவாதப் போட்டியில் ரோஹ்டக் இந்திய மேலாண்மை கழகம் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய வம்சாவளி அறிவியலாளரான தீப் ஜரிவாலா, அமெரிக்காவின் UT-ORNL பல்கலைக்கழகத்தின் குவாண்டம் சாதனங்களுக்கான ஆளுநர் இருக்கைப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒலிம்பிக் பதக்கம் வென்ற பிளாங்கா விளாசிக், பெங்களூருவில் நடைபெறவுள்ள உலக 10K பெங்களூரு 2026 ஓட்டப் பந்தயத்தின் உலகளாவிய தூதராக நியமிக்கப் பட்டு உள்ளார்.