சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையின் (IRENA) அறிக்கையின்படி, புதுப்பிக்கத் தக்க எரிசக்தி திறனில் (2026 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி 274.68 ஜிகாவாட்) சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா உலகளவில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
₹1 டிரில்லியன் (ஒரு லட்சம் கோடி) விற்றுமுதலைத் தாண்டிய முதல் இந்திய FMCG (வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள்) நிறுவனம் என்ற பெருமையை அமுல் பெற்றுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் அமையவுள்ள கமலா (1,720 மெகாவாட்) நீர்மின் திட்டத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டமானது மாநில அரசுடன் இணைந்து NHPC (தேசிய நீர்மின் சக்தி கழகம்) மூலம் உருவாக்கப்பட உள்ளது.
போபால் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் விண்ணப்ப தாரர்களுக்காக பிரெய்லி மற்றும் சைகை மொழிச் சேவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது மாற்றுத் திறனாளிகளுக்காக இந்தியப் பாஸ்போர்ட் அலுவலகங்களில் முன்னெடுக்கப் பட்ட முதல் முன்னெடுப்பு ஆகும்.
சாமுவேல் ஹானிமனின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 10-ஆம் தேதி உலக ஹோமியோபதி தினம் கொண்டாடப்படுகிறது.
2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு, "Homoeopathy for Sustainable Health" என்பதாகும்.
ஜேம்ஸ் பார்கின்சனின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 11-ஆம் தேதி உலக நடுக்குவாத நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு, "Bridge the care gap" என்பதாகும்.