TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 12 , 2026 15 hrs 0 min 5 0
  • எகிப்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் எகிப்து இடையேயான கூட்டு சிறப்புப் படை ராணுவப் பயிற்சியான சைக்ளோன் பயிற்சியின் 4வது பதிப்பில் இந்திய ராணுவம் பங்கேற்றது.
  • மெட்டா நிறுவனமானது புகைப்படங்களிலிருந்து கலோரிகளை கணக்கிடவும், கேள்விகளுக்கு பதிலளிக்கவும் மற்றும் பொருட்களின் அமைவிடங்களை காட்சிப்படுத்தவும் தனது சூப்பர் இன்டலிஜென்ஸ் லேப்ஸின் முதல் செயற்கை நுண்ணறிவு மாதிரியான மியூஸ் ஸ்பார்க் -ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.  
  • உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் அமைந்துள்ள, செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மைப் பிரிவானது; நிகழ்நேர உணரிகளையும் மாதிரிகளையும் பயன்படுத்தி வெள்ளத்தை முன்கூட்டியே கணிக்கும் இந்தியாவின் முதலாவது AI-சார்ந்த நகர்ப்புற வெள்ள முன்னறிவிப்பு அமைப்பாக உள்ளது.
  • குஜராத் ஜாம்நகரில் வனவிலங்கு மற்றும் கால்நடை அறிவியலுக்கான உலகின் முதல் உலகளாவிய பல்கலைக்கழகத்தை வன்தாரா  நிறுவனம் தொடங்கியது.
  • அருணாச்சலப் பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் (ஹவாய் கிராமம்) பிரம்ம புத்திரா நதியின் துணை நதியான லோஹித் நதியின் குறுக்கே அமைக்கப் படும் 1,200 மெகாவாட் கலை-II திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க சுற்றுச்சூழல் அமைச்சக குழு பரிந்துரைத்துள்ளது.
  • ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் துப்பாக்கிச் சூடு பயிற்சி தளத்தில் இந்திய ராணுவம் பிரம்மாஸ்திரா பயிற்சியை மேற்கொண்ட நிலையில் இதில் AH-64E அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் துல்லியமான தாக்குதல்களை நடத்தி தங்களின் போர் திறன்களை வெளிப்படுத்தின.
  • 1952 ஆம் ஆண்டில் சென்னையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை வீழ்த்தி இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்த அணியின் உறுப்பினரான முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சி.டி. கோபிநாத் தனது 96வது வயதில் காலமானார்.  
  • வடக்கு சிக்கிமில் நிலச்சரிவு காரணமாக சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகளை மீட்பதற்காக இந்திய ராணுவம் ஹிம் சேது நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்