TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 14 , 2026 3 days 81 0
  • பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்காக தெலுங்கானாவில் உள்ள வாரங்கல் மற்றும் அதிலாபாத் ஆகிய இடங்களில் விமான நிலையங்களை உருவாக்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு கூட்டு ராணுவப் பயிற்சியான DUSTLIK பயிற்சியின் 7வது பதிப்பு உஸ்பெகிஸ்தானில் தொடங்கியது.  
  • மலிவான இறக்குமதிகளைத் தடுத்து உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதற்காக, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) இயற்கை தேன் மீதான குறைந்தபட்ச இறக்குமதி விலையை (MIP) ஒரு டன்னுக்கு $1,400 ஆக 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது.
  • அறுவடைத் திருநாளாகவும், புத்தாண்டாகவும் மேஷ சங்கராந்தி அன்று ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 13 அல்லது 14 ஆம் தேதிகளில் பைசாகி தினம் கொண்டாடப் படுகிறது
    • மேலும் இது ரோங்காலி பிஹு (அசாம்), புத்தாண்டு (தமிழ்நாடு), விஷு (கேரளா) மற்றும் நபா பர்ஷா (மேற்கு வங்காளம்) எனவும் அனுசரிக்கப்படுகிறது.
  • குவாண்டம் அறிவியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 அன்று உலக குவாண்டம் தினம் கொண்டாடப்படுகிறது.
    • ஏப்ரல் 14 (4.14) என்ற தேதியானது குவாண்டம் இயற்பியலில் பயன்படுத்தப்படும் பிளாங்க் மாறிலியைக் (Planck’s constant) குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்