கிர்கிஸ்தானின் பிஷ்கெக்கில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் சுஜீத் கல்கல் (65 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவு) மற்றும் அபிமன்யு மாண்ட்வால் (70 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவு) ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றனர்.
இந்தியா-நேபாள இணைப்பை மேம்படுத்தவும், ரூபாய்டிஹா-நேபாள்கஞ்ச் வழித் தடம் வழியாக வர்த்தகத்தை அதிகரிக்கவும் தேசிய நெடுஞ்சாலை-927 இல் 4 வழிச் சாலை பராபங்கி-பஹ்ரைச் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டதை அடுத்து பதவியிலிருந்து விலகிய நிதிஷ் குமாருக்குப் பதிலாக, பீகார் மாநில முதலமைச்சராக சாம்ராட் சவுத்ரி பதவியேற்றார்.
இதன் மூலம் இப்பதவியை வகிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் முதல் தலைவர் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.
இஸ்ரேலின் மொசாட் அமைப்பின் புதிய தலைவராக ரோமன் கோஃப்மேன் நியமிக்கப் பட்டுள்ளார்.
குரல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குரல் சார்ந்த கோளாறுகளைத் தடுத்தல், கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிப்பதை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16 ஆம் தேதி உலக குரல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Caring for Our Voices” என்பதாகும்.