இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 2026 ஆம் ஆண்டு இலங்கைக்குத் தனது முதல் இருதரப்புப் பயணத்தை மேற் கொண்டதோடுஇந்திய வீட்டு வசதித் திட்டத்தின் (இந்தியா ஆதரவளிக்கும் வீட்டு வசதித் திட்டம்) கீழ் கட்டப்பட்ட வீடுகளை ஒப்படைத்தார்.
IIT மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்காவில் தாவர செல் நொதித்தல் தொடர்பான இந்தியாவின் முதல் சிறப்பு மையத்தை அமைக்க ஹெர்பலைஃப் இந்தியா மற்றும் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் (IIT Madras) ஆகியவை இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
அமெரிக்காவின் கேப் கனாவெரல் விண்வெளிப் படை நிலையத்திலிருந்து ஏவப்பட்ட, மறுபயன்பாடு செய்யப்பட்ட நியூ கிளென் முதல் நிலை உந்துவிசையின் முதல் தரையிறக்கத்தை ப்ளூ ஆரிஜின் நிறுவனம் வெற்றிகரமாக நிகழ்த்தியது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக என்று ஐக்கிய நாடுகள் சபையால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 அன்று சர்வதேச அன்னை பூமி தினம் அனுசரிக்கப்படுகிறது.
நிலையான வளர்ச்சியில் படைப்பாற்றல் மற்றும் புதுமைகளின் பங்கை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21 அன்று உலகப் படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Harnessing Creativity for Global Progress" என்பதாகும்.