TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 24 , 2026 14 hrs 0 min 28 0
  • DRDO நிறுவனம் செயற்கை நுண்ணறிவால் இயங்கக் கூடிய, நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்களைக் கண்டறிவதற்காக ப்ரஜ்னா எனும் அமைப்பை உருவாக்கி, உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்தது.
  • கொள்கை உரையாடல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் (ORF) மற்றும் வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பு (RIS) ஆகியவை இணைந்து புது தில்லியில் தொடக்க பிரிக்ஸ் (BRICS) கல்வி மன்றத்தை தொடங்கின.
  • பெட்ரோகிளிஃப்ஸ் (பாறைகளில் செதுக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய வேலைப் பாடுகள்) எனப்படும் பழமையான பாறைச் சிற்பங்களைப் பாதுகாப்பதற்காக, இந்தியாவின் முதல் பெட்ரோகிளிஃப் பாதுகாப்புப் பூங்காவிற்கான அடிக்கல் சிந்து நதிக்கரையில் உள்ள லடாக்கில் நாட்டப்பட்டது, லடாக்கில் இதுபோன்று சுமார் 400 இடங்கள் உள்ளன.
  • இங்கிலாந்து விலங்கியல் நிபுணரும், எழுத்தாளரும், தொலைக்காட்சித் தொகுப்பாளருமான டெஸ்மண்ட் மோரிஸ் அயர்லாந்தில் தனது 98 வயதில் காலமானார், மனிதர்களை விலங்கு ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக விளக்கும் ‘The Naked Ape’ என்பது இவரது புகழ்பெற்ற புத்தகமாகும்.
  • உலகளாவிய எல்லை மேலாண்மை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான கடல்சார் பாதுகாப்பு, கடலோரக் கண்காணிப்பு, நாடுகடந்த அச்சுறுத்தல்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்ற ஆஸ்திரியாவின் வியன்னாவில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான உலக எல்லைப் பாதுகாப்பு காங்கிரஸில் இந்தியா பங்கேற்றது.
  • காட்சிக் கலையின் ஒரு வடிவமான சிற்பக்கலை பற்றிய விழிப்புணர்வையும் பாராட்டையும் மேம்படுத்தும் வகையில் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று (ஏப்ரல் மாதத்தின் கடைசி சனிக்கிழமை) சர்வதேச சிற்பக்கலை தினம் அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்