உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஷேகா ஏரி பறவைகள் சரணாலயம் இந்தியாவின் 99-வது ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது
அலிகாரில் இருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் அமைந்து உள்ள ஒரு நன்னீர் ஈரநிலமான இது மேல் கங்கை கால்வாய் கட்டப்பட்ட பிறகு 1852-ஆம் ஆண்டில் உருவானது.
4-வது இந்தியா-இலங்கை டைவிங் பயிற்சில் (DIVEX 2026) கலந்து கொள்வதற்காக ஐஎன்எஸ் நிரீக்சக் கப்பல் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய ஆசியாவிலேயே முதன்முறையாக, சர்வதேச பாராலிம்பிக் குழுவால் ஏற்பாடு செய்யப்படும் 13-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2027, ஜூன் மாதம் தாஷ்கண்டில் நடைபெறவுள்ளது.
பெடெக்ஸ் (FedEx) மற்றும் மதராஸ் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT Madras) ஆகியவை இணைந்து இந்தியாவின் முதல் நகரத்திற்கு உள்ளேயான ஆளில்லா விமானத்தின் மூலம் விநியோகச் சோதனைகளை பெங்களூருவில் நடத்தின.
உலகளவில் கண்டுபிடிப்புகளைப் பாதுகாப்பதிலும், படைப்பாற்றலை ஊக்குவிப்பதிலும் அறிவுசார் சொத்துரிமையின் பங்கை எடுத்துரைக்கும் வகையில், உலக அறிவுசார் சொத்துரிமை நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 26-ஆம் தேதி உலக அறிவுசார் சொத்துரிமை தினத்தை கொண்டாடுகிறது.
2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு "IP and Sports: Ready, Set, Innovate" என்பதாகும்.