TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 29 , 2026 2 days 44 0
  • உலக சுகாதார நிறுவனமானது, பிறந்த குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான முதல் மலேரியா சிகிச்சை மருந்தான ஆர்டெமிதர்-லுமெஃ பாண்ட்ரைனுக்கு முன்-அங்கீகாரம் அளித்துள்ளது, இந்த மருந்தானது 2 முதல் 5 கிலோ எடை கொண்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பான அளவாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • தூய்மையான எரிசக்திக்கு ஆதரவளிக்கும் வகையில், மின்கலங்கள், அரிய வகை காந்தங்கள் மற்றும் தொழில்துறை கழிவுகளை செயலாக்கும் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த லித்தியம்-இரும்பு பேட்டரிகள் மற்றும் அரிய வகை காந்தங்களுக்கான மறுசுழற்சி ஆலை உத்தரப் பிரதேசத்தின் சிக்கந்திராபாத்தில் அமைக்கப் பட்டுள்ளது.
  • 4-வது இந்தியா-ஆப்பிரிக்கா மன்ற உச்சி மாநாடானது ஆப்பிரிக்க ஒன்றிய ஆணையத்துடன் இணைந்து 2026 ஆம் ஆண்டு மே 31 அன்று புது தில்லியில் நடைபெற உள்ள நிலையில் இந்த மாநாட்டின் சின்னம், கருத்துரு மற்றும் இணையதளம் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன.
    • இந்த உச்சிமாநாட்டின் கருத்துரு “IA SPIRIT: India Africa Strategic Partnership for Innovation, Resilience, and Inclusive Transformation” என்பதாகும்.
  • அரசு மருத்துவமனைகளில் அதிக அளவில் மக்கள் சிகிச்சை பெற்று வருவதன் மூலம், பொது சுகாதாரப் பயன்பாட்டில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.
  • தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்பத் (ICT) துறையில் பெண்கள் தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமை (2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 23) அன்று சர்வதேச 'தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்பத்தில் பெண்களுக்கான தினம்' கொண்டாடப் படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "AI for Development: Girls shaping the digital future" என்பதாகும்.
  • நடனம் மற்றும் அதன் கலாச்சார மதிப்பு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 29 அன்று சர்வதேச நடன தினம் கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்