அரிய வகை கடல் நத்தையான டிஸ்கோடோரிட் செபுயென்சிஸ் இந்தியாவில் முதல் முறையாக மும்பையின் ஹாஜி அலி பகுதியில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
கடல் நத்தைகள் என்பவை பவளப் பாறைகளில் காணப்படும் மென்மையான உடலைக் கொண்ட, ஓடில்லாத கடல்வாழ் வயிற்றுக்காலிகள்/காஸ்ட்ரோபாட்கள் ஆகும், இவை ஆரோக்கியமான கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் குறிகாட்டிகளாகவும் செயல்படுகின்றன.
சீனாவின் மக்கள் விடுதலைப் படையின் கண்காணிப்பு மற்றும் தாக்குதலுக்காக 96 ஆளில்லா விமானங்கள் வரை ஏவக்கூடிய மற்றும் கட்டுப்படுத்தக்கூடிய செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தளமான அட்லஸ் ஆளில்லா விமான தொகுப்பு அமைப்பை சீனா அறிமுகப்படுத்தியது.
அருணாச்சலப் பிரதேசத்தின் சாங்லாங் மாவட்டத்தில் உள்ள நம்தாபா புலிகள் காப்பகத்தில் லிம்னோனெக்டெஸ் மோடிஜில் என்ற புதிய பல் கொண்ட தவளை இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் உள்ள மஹிஸ்திக்ரியில் லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கான இந்தியாவின் முதல் நேர்மின்வாய் பொருள் தயாரிப்பு ஆலையை ஹிமாத்ரி ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் நிறுவனம் தொடங்கியது.
கொலம்பியாவின் சாண்டா மார்டாவில் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து மாறுவது தொடர்பான முதல் மாநாட்டை கொலம்பியாவும் நெதர்லாந்தும் இணைந்து நடத்த உள்ளன.
உணவுப் பாதுகாப்பு, பொது சுகாதாரம் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்தில் கால்நடை மருத்துவர்களின் பங்கை முன்னிலைப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 அன்று உலக கால்நடை மருத்துவ தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Veterinarians: Guardians of Food and Health" என்பது ஆகும்.
ஜாஸ் இசை மூலம் அமைதி, கலாச்சார உரையாடல் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 30 அன்று சர்வதேச ஜாஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.