சேலத்தைச் சேர்ந்த ஆர். ரித்திகா ஸ்ரீ, தமிழ்நாட்டிலிருந்து உருவான இந்தியாவின் முதல் திருநங்கை கிரிக்கெட் நடுவர் ஆனார்.
கேரளாவில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு தாவர இனங்களை அடையாளம் காணும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ஆரம்பகால கண்டறிதல் மற்றும் பல்லுயிர்ப் பாதுகாப்பிற்கு துணை புரிகின்ற செயலியை உருவாக்கியதற்காக என். அலிம் யூசுப்பை உலக வனவிலங்கு நிதியம் (WWF) கௌரவித்துள்ளது.
பத்மஸ்ரீ விருது பெற்றவரும், புகழ்பெற்ற இந்திய புகைப்படக் கலைஞருமான ரகு ராய் தனது 83 வயதில் டெல்லியில் காலமானார்.
புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனமானது, மௌசம் திட்டத்தின் கீழ் மகாராஷ்டிராவின் மகாபலேஷ்வரில் அருகிலுள்ள பகுதிகளுக்கான நிகழ்நேரக் கண்காணிப்பு மற்றும் குறுகிய கால வானிலை முன்னறிவிப்புகளை மேம்படுத்துகின்ற புதிய X-பட்டை டாப்ளர் வானிலை ரேடாரை நிறுவியுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது (DRDO), இந்தியக் கடற்படையுடன் இணைந்து வங்காள விரிகுடாவில் ஒடிசா கடற்கரைக்கு அப்பால் ஒரு ஹெலிகாப்டரில் இருந்து NASM-SR (குறுகிய தூர கடற்படை கப்பல் எதிர்ப்பு எறிகணை) எறிகணையின் முதல் சால்வோ சோதனையை நடத்தியது.
சால்வோ சோதனை என்பது ஒரே தளத்தில் இருந்து இரண்டு எறிகணைகளை விரைவாக ஏவுவதாகும்.
தடுப்பூசிகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24 முதல் 30 ஆம் தேதி வரை உலக தடுப்பூசி வாரம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "For every generation, vaccines work" என்பதாகும்.