TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 3 , 2026 15 hrs 0 min 17 0
  • 21 வகை குறைபாடுகளைக் கண்டறியவும், பள்ளிகளில் சிறப்புத் தேவையுடைய குழந்தைகளை (CWSN) முன்கூட்டியே பரிசோதிக்கவும், சான்றிதழ் பெறுவதை எளிதாக்கவும், மாணவர்களை சமக்ர சிக்‌ஷாவுடன் இணைக்கவும் இந்திய அரசு பிரசாஸ்ட் 2.0 எனும் திட்டத்தைத் தொடங்கவுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டின் லண்டன் மாரத்தான் போட்டியில் கென்யா நாட்டைச் சார்ந்த செபாஸ்டியன் சாவே 1 மணி 59 நிமிட 30 வினாடிகளில் பந்தயத்தை முடித்து, அதிகாரப் பூர்வ மாரத்தான் போட்டியில் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் ஓடிய முதல் தடகள வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
  • சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பானது (FIDE), சர்வதேச உலக விளையாட்டு சங்கத்தின் உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது; லொசேன் நகரில் நடந்த அதன் வருடாந்திரப் பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு அங்கீகரிக்கப்பட்டது.
  • இந்தியப் பாரம்பரிய இசைக் கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் 13-வது சுர் ஜோத்ஸ்னா தேசிய இசை விருதுகள் புது தில்லியில் நடைபெற்றன, இதில் இந்துஸ்தானி பாடகர்களான சுமித்ரா குகா மற்றும் பண்டிட் லக்ஷ்மன் கிருஷ்ணராவ் பண்டிட் ஆகியோரின் வாழ்நாள் பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டது.
  • கூகுள் நிறுவனமானது விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலர் மதிப்பில் செயற்கை நுண்ணறிவு (AI) மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது; இதில் செயற்கை நுண்ணறிவு மேம்பாடு மற்றும் பெரிய அளவிலான தரவுச் செயலாக்கத்தை ஆதரிக்கும் ஆற்றல் திறன் கொண்ட "பசுமை" தரவு மையங்களும் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்