ஈ-ஸ்போர்ட்ஸ் மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸை இணைக்கும் வகையில், ஃபார்முலா 1 மற்றும் மும்பை ஃபால்கான்ஸ் ரேசிங் லிமிடெட் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியாவின் முதல் அதிகாரப்பூர்வ 2026 ஆம் ஆண்டிற்கான F1 சிம் ரேசிங் இந்தியா ஓபன்-ஐ இந்தியா தொடங்கியுள்ளது.
பழங்குடியினப் பல்லுயிர் மற்றும் பாரம்பரிய விவசாயத்தை மேம்படுத்துவதற்காக, ஆந்திரப் பிரதேசத்தின் அரக்கு பள்ளத்தாக்கில் 17-வது பழங்கால விதை திருவிழா நடைபெற்றது.
சாலைப் பாதுகாப்பு மற்றும் தெரிவுநிலையை மேம்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை 44-இன் ஒரு பகுதி முதல்முறையாக சிவப்பு நிறத்தில் வண்ணம் பூசப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நடந்த விபத்து அபாயம் உள்ள பகுதியான தோப்பூர் கணவாய் சாலையில் இந்த சிவப்பு நிற அடையாளங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.
இந்தியாவில் சால்டிசிடே குடும்பத்தைச் சேர்ந்த மோக்ரஸ் ஷுஷ்கா மற்றும் மோக்ரஸ் புனே ஆகிய இரண்டு புதிய குதிக்கும் சிலந்தி இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மோக்ரஸ் ஷுஷ்கா ராஜஸ்தான் மற்றும் குஜராத்தின் வறண்ட பகுதிகளிலும், மோக்ரஸ் புனே மகாராஷ்டிராவின் நகர்ப்புற பூங்காக்களிலும் காணப்பட்டன.
இயங்குதன்மை, ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 11 நாடுகள் பங்கேற்கும் "பிரகதி" என்ற முதல் பலதரப்பு ராணுவப் பயிற்சியை மேகாலயாவின் உம்ரோயில் இந்திய ராணுவம் நடத்துகிறது.
பிரகதி என்பது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான பிராந்திய ராணுவங்களின் கூட்டாண்மை என்பதைக் குறிக்கிறது.
நிலையான மீன்பிடித்தலை மேம்படுத்தவும், கடல் வளங்களைப் பாதுகாக்கவும் ஆண்டுதோறும் மே 2 அன்று உலக சூரை மீன் தினம் அனுசரிக்கப்படுகிறது.
தீயணைப்பு வீரர்களின் சேவை மற்றும் தியாகத்தை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மே 4 அன்று சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் அனுசரிக்கப் படுகிறது.