TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 8 , 2026 2 days 50 0
  • பிலிப்பைன்ஸில் மயோன் எரிமலை வெடித்ததால், ஏறக்குறைய 1,500 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர் மற்றும் மணிலாவுக்கு அருகிலுள்ள வான்வெளிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன.
    • பிலிப்பைன்ஸ் 'பசிபிக் நெருப்பு வளையத்தில்' அமைந்துள்ளதுடன் அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படும் ஒரு பகுதி ஆகும்.
  • அமெரிக்காவின் அரிசோனா பாலைவனத்தில், தங்களை விட மிகப் பெரிய அறுவடை எறும்புகளை தாக்காமல் தூய்மைப்படுத்தும் "துப்புரவு எறும்புகளை" அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
    • டோரிமைர்மெக்ஸ் இனத்தைச் சேர்ந்த சிறிய கூம்பு எறும்புகளானது, அறுவடை எறும்புகளான போகோனோமைர்மெக்ஸ் பார்பாட்டஸ் எறும்புகளின் உடலையும் திறந்த தாடைகளையும் சுத்தம் செய்வதைக் கண்டறிந்தனர்.
  • பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கும் (US) இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியான பாலிகடன் 2026 ஆனது, 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 முதல்  மே 8 ஆம் தேதி வரை பிலிப்பைன்ஸில் நடைபெறுகிறது.
  • Pixxel மற்றும் Sarvam நிறுவனங்கள் இணைந்து, இந்தியாவின் முதலாவது சுற்றுப்பாதை தரவு மையச் செயற்கைக்கோளான 'Pathfinder'-ஐ உருவாக்கி வருகின்றன; 200 கிலோ எடைப் பிரிவைச் சேர்ந்த இந்தச் செயற்கைக்கோள், 2026-ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் விண்ணில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • சுற்றுச்சூழல் கண்காணிப்பு, வள மேலாண்மை மற்றும் உள்கட்டமைப்பு கண்காணிப்பு ஆகியவற்றுக்கான நிகழ்நேர தரவுகள் செயலாக்கத்தை சாத்தியம் ஆக்குவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
  • புகழ்பெற்ற கேலிச்சித்திர ஓவியரான மரியோ மிராண்டாவின் நூற்றாண்டு பிறந்த நாளைக் குறிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டு மே 3 அன்று கோவாவின் பனாஜியில் இந்திய அஞ்சல் துறையானது அவருக்கு தபால்தலை வெளியிட்டு அஞ்சலி செலுத்தியது.
  • சிரிப்பின் மூலம் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்காக, 2026 ஆம் ஆண்டிற்கான உலக சிரிப்பு தினம் 2026 ஆம் ஆண்டு மே 3 அன்று (மே மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "World Peace through Laughter" என்பதாகும்.
  • மனிதாபிமானப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கௌரவிப்பதற்காக, உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 8 அன்று அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Keeping Humanity Alive" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்