TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 9 , 2026 16 hrs 0 min 2 0
  • கம்போடியா-இந்தியா ஆகிய நாடுகளின் இருதரப்பு ராணுவப் பயிற்சியின் (CINBAX-II) 2026 2வது பதிப்பு கம்போடியாவில்  நடைபெறுகிறது
  • ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி மாவட்டம் சத்தியவேடு பகுதியில் தமிழ்நாடு அல்லாத தனது முதல் உற்பத்தி ஆலையை அமைக்க ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ₹2,200 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
  • சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தின் 118 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டு வரும் கிண்டி சூழலியல் பூங்கா திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள ராதாநகர் கடற்கரையில் நீருக்கடியில் மிகப்பெரிய தேசியக் கொடியை பறக்கவிட்டு இந்தியா கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
  • தாய் மற்றும் பச்சிளங்குழந்தைகள் சுகாதார பராமரிப்பில் செவிலியர்களின் முக்கியப் பங்கை அங்கீகரிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே 5 ஆம் தேதி சர்வதேச செவிலியர்கள் தினம் (IDM) உலகெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “One Million More Midwives” என்பதாகும்.
  • நோய்த்தொற்றுகளைத் தடுப்பதிலும் நோயாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் கைகளின் சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 5 ஆம் தேதி உலக கைகள் சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Action saves lives" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்