TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 17 , 2026 15 days 73 0
  • DRDO அமைப்பானது ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் விமான ஒருங்கிணைப்பு மற்றும் விமான சோதனை வளாகத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது.
  • ஹண்டாவைரஸ் கண்காணிப்பிற்காக 165 ஆய்வகங்களுடன் கூடிய நாடு தழுவிய வைரஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டறியும் ஆய்வக வலையமைப்பை இந்தியா செயல் படுத்தியுள்ளது.
    • இந்தக் கண்காணிப்பு அமைப்பு இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ICMR), தேசிய வைராலஜி நிறுவனம் (NIV) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகிறது.
  • மனநலம் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 11 முதல் மே 17 வரை மனநல விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Action" என்பதாகும்.
  • உலகம் முழுவதும் உள்ள குடும்பங்களைப் பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 15 அன்று சர்வதேச குடும்பங்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Families, Inequalities and Child Wellbeing" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்