இந்திய அறிவியலாளர் குல்ஜீத் கவுர் மர்ஹாஸ், விண்கல் மற்றும் கிரக அறிவியல் துறையில் 2026 ஆம் ஆண்டிற்கான 'தி மீட்டியோரிட்டிக்கல் சொசைட்டி'-யின் ஆய்வாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்மணி ஆனார்.
ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் மேம்பட்ட நடுத்தர போர் விமான (AMCA) திட்ட வசதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
DRDO-இன் கீழ் உள்ள விமானவியல் மேம்பாட்டு முகமையால் உருவாக்கப்படும் இந்த வசதி, இந்தியாவின் உள்நாட்டு ஐந்தாம் தலைமுறை ரேடாருக்குப் புலப்படாத போர் விமானத்தின் மேம்பாடு மற்றும் விமான சோதனைக்கு ஆதரவளிக்கும்.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள பிவாடியில் தனது முதலாவது குறைக்கடத்திஒருங்கிணைப்பு, சோதனை, குறியிடுதல் மற்றும் பொதியிடல் / பேக்கேஜிங் (ATMP) / வெளிப்புறம் சார்ந்த குறைக்கடத்தி ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை (OSAT) மையத்தைத் தொடங்கிவைத்தது.
சில்லு உற்பத்தி மற்றும் மின்னணுத் தொழில்களை ஊக்குவிப்பதற்காக ராஜஸ்தான் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தனது குறைக்கடத்திக் கொள்கையை அறிமுகப்படுத்தியது.
இந்தியாவின் முதல் ஹைட்ரஜனில் இயங்கும் இணைப்பு பேருந்து சேவை புது தில்லியின் சென்ட்ரல் விஸ்டா பகுதியில் தொடங்கியது.
ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலப் பேருந்துகளானது ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன, மேலும் குழாயின் வழியே உமிழ்வாக நீராவியை மட்டுமே வெளியிடுகின்றன.
வாகன மாசுபாட்டைக் குறைக்கவும், காற்றின் தரத்தை மேம்படுத்தவும் மகாராஷ்டிராவின் புனே நகரம் இந்தியாவின் முதல் குறைந்த உமிழ்வு மண்டலத்தை (LEZ) நிறுவும்.
அழிந்து வரும் வனவிலங்குகள் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 2026 ஆம் ஆண்டு மே மாதத்தின் மூன்றாவது வெள்ளிக் கிழமையான மே 15 அன்று தேசிய அழிந்து வரும் உயிரினங்கள் தினம் அனுசரிக்கப் படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Celebrating America’s Wildlife Comeback Stories. Championing the Endangered Species Act.” என்பதாகும்.