TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 21 , 2026 12 days 99 0
  • அகமதாபாத்-தோலேரா இடையே ₹20,667 கோடி மதிப்பீட்டிலான பகுதி அதிவேக ரயில் திட்டத்திற்குப் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
    • அகமதாபாத்தில் உள்ள சர்க்கேஜ் பகுதியையும் குஜராத்தில் உள்ள தோலேராவையும் இணைக்கும் இந்த இரட்டைப் பாதை இரயில் வழித்தடமானது, உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்திய இரயில்வேயின் முதல் பகுதி அதிவேக இரயில் திட்டமாகும்.
  • நேபாளத்தைச் சேர்ந்த காமி ரிடா ஷெர்பா 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ள நிலையில் இதன் மூலம், 1994-ஆம் ஆண்டு தனது முதல் பயணத்தைத் தொடங்கியதிலிருந்து அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தவர் என்ற தனது சொந்த சாதனையை அவர் மேலும் நீட்டித்துள்ளார்.
    • லக்பா ஷெர்பா தனது 11-வது எவரெஸ்ட் பயணத்தின் மூலம் தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளதுடன் இவர் 2000 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறி, பின் இறங்கிய முதல் நேபாள பெண்மணி ஆவார்.
  • 'ஃப்ளையிங் வெட்ஜ் டிஃபென்ஸ் & ஏரோஸ்பேஸ்' நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட, இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் தன்னாட்சி போர் விமானமான "கால் பைரவா", முதன்முறையாக ஐரோப்பாவில் தயாரிக்கப்பட உள்ளது.
  • அறிவியல் மற்றும் அன்றாட வாழ்க்கையில் ஒளி மற்றும் ஒளி சார்ந்த தொழில் நுட்பங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 16 அன்று சர்வதேச ஒளி தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Light for a Sustainable Future" என்பதாகும்.
  • டெங்கு தடுப்பு மற்றும் கொசு கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை இந்தியா முழுவதும் ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 16 அன்று தேசிய டெங்கு தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Community Participation for Dengue Control: Check, Clean and Cover" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்