வாழ்க்கை மற்றும் சுற்றுச்சூழல் அறிவியலுக்கான பங்களிப்புகளுக்காக L'Oréal-UNESCO-வின் அறிவியல் துறையில் பெண்களுக்கான விருது பெற்றவர்களாக லீசல் சூல்கே (தென்னாப்பிரிக்கா), ஃபெலிஸ் ஜாக்கா (ஆஸ்திரேலியா), சாரா ஏ. டீச்மேன் (யுனைடெட் கிங்டம்), ராகேல் லியா சான் (அர்ஜென்டினா) மற்றும் கோர்டானா வுன்ஜாக்-நோவாகோவிக் (அமெரிக்கா) ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பன்சாத் நாக் நீரூற்று பாதுகாப்பு திருவிழா சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது.
இது நீரூற்றுகளைச் சுத்தம் செய்தல், ஈரநிலங்களை மீட்டெடுத்தல் மற்றும் பாரம்பரிய மீன்பிடி நடைமுறைகளை ஒருங்கிணைக்கும் மக்கள் தலைமையிலான ஒரு திருவிழாவாகும்.
தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா நகரத்தில் HIV/AIDS, காசநோய் ஆராய்ச்சி மற்றும் COVID-19 பேரிடர் காலத் தலைமைக்கான பங்களிப்புகளுக்காக சலீம் அப்துல் கரீம் 'ஆர்டர் ஆஃப் மாபுங்குப்வே' தங்க விருதைப் பெற்றதுடன், காசநோய் மற்றும் மருந்து-எதிர்ப்பு சுவாச நோய்த் தொற்றுகள் குறித்த ஆராய்ச்சிக்காக கீர்த்தன் தேடா ஆற்றிய பணிகளுக்காக வெள்ளி விருதைப் பெற்றார்.
'ஆர்டர் ஆஃப் மாபுங்குப்வே' என்பது சமூகம் மற்றும் மனிதகுலத்திற்குப் பயனளிக்கும் சிறப்பான மற்றும் விதிவிலக்கான சாதனைகளுக்காக வழங்கப் படும் தென்னாப்பிரிக்காவின் உயரிய குடிமக்கள் விருதாகும்.
பயங்கரவாதம் மற்றும் வன்முறையின் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மே 21 அன்று பயங்கரவாத எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலகளவில் தேநீரின் கலாச்சார, பொருளாதார மற்றும் சுகாதார முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 21 அன்று சர்வதேச தேநீர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலகெங்கிலும் விளையாட்டின் மூலம் அமைதி, உள்ளடக்கம், நீதி, ஒற்றுமை, நேர்மை மற்றும் மரியாதையை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மே 19 அன்று உலக நியாயமான விளையாட்டு தினம் அனுசரிக்கப்படுகிறது.