மெசாலினா என்ற பேரினத்தைச் சேர்ந்த புதிதாகக் கண்டறியப்பட்ட 'மெசாலினா பிஷ்னோய்' என்ற பல்லி இனமானது, ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் உள்ள கஜ்னேர் அருகே உள்ள திறந்தவெளி பகுதிப் பாலைவன வாழ்விடத்திலிருந்து இந்தியாவில் முதன்முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்பில் நீண்டகால பாரம்பரியத்தைக் கொண்டுள்ள பிஷ்னோய் சமூகத்தை அங்கீகரிக்கும் வகையில் இந்த இனத்திற்கு அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தினேஷ் குமார் திரிபாதி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இந்தியக் கடற்படையின் 27வது கடற்படைத் தளபதியாக (CNS) அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் 2026 ஆம் ஆண்டு மே 31 அன்று பொறுப்பேற்றார்.
நிலையான வேளாண்மையை ஊக்குவித்ததற்காக, பொள்ளாச்சியைச் சேர்ந்த தமிழக விவசாயி வள்ளுவன் அவர்களுக்கு உணவு மற்றும் வேளாண்மை அமைப்பால் (FAO) “FAO மண் விவசாய வீரன்” (FAO Soil Farmer Hero) என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஒடிசாவின் பாரதீப் துறைமுக ஆணையமானது (PPA), துறைமுக செயல்பாடுகள் மற்றும் தளவாடச் செயல்திறனில் சிறந்து விளங்கியதற்காக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகத்திடமிருந்து (MoPSW) 2026 ஆம் ஆண்டிற்கான சாகர் ஆங்கலான் விருதைப் பெற்றது.
தளவாட துறைமுகச் செயல்திறனுக்கான சாகர் ஆங்கலான் சான்றிதழில் பாரதீப் துறைமுக ஆணையமானது (PPA) மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.
கரிப்பு நிலங்கள் மற்றும் முற்றா நிலக்கரியின் முக்கியத்துவம் குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் ஜூன் 2 அன்று உலக கரிப்பு நிலங்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.