TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 7 , 2026 31 days 138 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (DRDO) உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட வானிலிருந்து தரையிலுள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் 'ருத்ரம்-II' என்ற கதிர்வீச்சு எதிர்ப்பு எறிகணையை (ARM) இந்திய விமானப்படை (IAF) வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  • வாட்டிகன் துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் முதல் பொதுநிலைப் பெண்மணியாக மரியா மான்ட்செராட் அல்வராடோ நியமிக்கப்பட்டுள்ளார்; வாட்டிகன் அதிகாரப் பிரிவின் தலைவராகப் பணியாற்றும் முதல் பொதுநிலைப் பெண்மணியாக இவர் 2026 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று அப்பொறுப்பை ஏற்க உள்ளார்.
  • ஆந்திரப் பிரதேச சமூகம் சார்ந்த இயற்கை வேளாண்மை (APCNF) அமைப்பானது, நிலையான உணவு முறைக்கான உலகளாவிய விருதான 2026 ஆம் ஆண்டிற்கான 'புட் பிளானட்' விருதை வென்றுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான சூரியசக்தி மாத விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தியதற்காக ஒடிசா மாநிலம் 'பிரதான் மந்திரி சூர்யா கர் சிறப்பு விருதுகளுக்கு' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
    • நடுத்தர நுகர்வோர் மாநிலங்களில் விண்ணப்பங்கள், சூரியசக்தி தகடுகள் நிறுவுதல் மற்றும் விநியோக நிறுவனங்களின் (DISCOM) ஆய்வுகள் ஆகியவற்றில் ஒடிசா முதலிடத்தையும், அதிகபட்ச விற்பனையாளர் பதிவுகள் பிரிவில் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான உலக சுற்றுச்சூழல் தினத்தை (ஜூன் 5) முன்னிட்டு, இந்தியாவின் முதல் இயற்கையாகவே மட்கக் கூடிய பால் பொட்டலத்தினை / பாக்கெட்டை 'மதர் டெய்ரி' நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • சமூக ஊடகத் தளங்கள் பயனர்களின் வயதைச் சரிபார்க்கவும், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கணக்குகளை உருவாக்குவதைத் தடுக்கவும் கோரும் சட்டத்தை 2026 ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் மலேசியா அமல்படுத்தத் தொடங்கியுள்ளது.
  • போர்கள் மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூன் 4 ஆம் தேதி 'ஆக்கிரமிப்பால் பலியான அப்பாவி குழந்தைகளுக்கான சர்வதேச தினம்' அனுசரிக்கப்படுகிறது.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான மேம்பாட்டை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் உலகளவில் அனுசரிக்கப் படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Inspired by Nature. For Climate. For Our Future" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்