மத்திய அரசானது, மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பின் (CPGRAMS) கீழ் 'சமாதான் தீதி' என்ற செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான குரல்வழி சாட்பாட்டைத் தொடங்கி வைத்தார்.
இந்த சாட்பாட் ஆனது குடிமக்களுக்கு எளிய மொழி மற்றும் உள்ளூர் வட்டார வழக்குகளில் குரல்வழித் தொடர்பு மூலம் தங்கள் குறைகளைப் பதிவு செய்யவும் கண்காணிக்கவும் அனுமதிக்கிறது.
இந்திய விலங்கியல் ஆய்வகத்தின் (ZSI) அறிவியலாளர்கள், மியான்மர் எல்லைக்கு அருகிலுள்ள நாகாலாந்தின் கிபைர் மாவட்டத்தில் 'அமோலோப்ஸ் கமல்' (நாகாலாந்து நீர்வீழ்ச்சிவாழ் தவளை) என்ற புதிய தவளை இனத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த இனம் அமோலோப்ஸ் பேரினத்தைச் சேர்ந்தது; இதில் உலகளவில் 90 அங்கீகரிக்கப் பட்ட சிற்றினங்கள் உள்ளன, அவற்றில் 20 சிற்றினங்கள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி 2026 ஆம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) பட்டத்தை வென்றது.
மேக்னஸ் கார்ல்சன், டி. குகேஷ், அலிரேசா ஃபிரௌஜா மற்றும் வின்சென்ட் கீமர் உள்ளிட்ட முன்னணி வீரர்களை வீழ்த்தி 18 புள்ளிகளுடன் புகழ்பெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான நார்வே செஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஆர். பிரக்ஞானந்தா பெற்றார்.
ரயில்வே இருப்புப்பாதை கடக்கும் இடங்களில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூன் 5 அன்று சர்வதேச இருப்புப்பாதை கடக்கும் விழிப்புணர்வு தினம் (ILCAD) அனுசரிக்கப்படுகிறது.
நிலையான மீன்வள மேம்பாட்டை ஊக்குவிக்கவும், கடல் வளங்களைப் பாதுகாக்கவும் சட்டவிரோதமான, பதிவு செய்யப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன் பிடித்தலுக்கு எதிரான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 அன்று அனுசரிக்கப் படுகிறது.