பில்ட் 2026 நிகழ்வில் மைக்ரோசாப்ட் நிறுவனமானது மஜோரானா 2 எனும் குவாண்டம் சில்லு/சிப்பை வெளியிட்டது; இதில் குபிட் (qubit) நிலைத்தன்மையில் ஒரு பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் சராசரி ஆயுட்காலம் 20 விநாடிகளாகவும், அதிகபட்சமாக 60 விநாடிகள் வரை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் வனவிலங்கு கணக்கெடுப்பின் போது, ஒரு அரிய வகை காட்டுப் பூனை (caracal) பதிவாகியுள்ளது.
இந்தியாவின் மிக அரிய வகை காட்டுப் பூனை இனங்களில் ஒன்றான இது புல்வெளிகள், குறுங்காடுகள் மற்றும் வறண்ட வாழ்விடங்களுக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொள்ளக்கூடியது.
முன்னாள் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) வினோத் ராய் எழுதிய "When Audit Matters: CAG Interventions That Made a Difference" என்ற புத்தகத்தை இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெளியிட்டார்.
குஜராத்தில் உள்ள கல்பசார் திட்டத்தில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான விருப்பக் கடிதத்தில் இந்தியாவும் நெதர்லாந்தும் கையெழுத்திட்டுள்ளன.
கல்பசார் திட்டம் என்பது காம்பே வளைகுடாவின் குறுக்கே அணை கட்டுவதற்கான குஜராத் மாநில அரசின் பல்நோக்குத் திட்டமாகும்.
பாதுகாப்பான உணவுப் பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதற்கும், உணவு சார்ந்த நோய்களைத் தடுப்பதற்கும் ஆண்டுதோறும் ஜூன் 7 அன்று உலக உணவுப் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு “From Burden to Solutions – Safe Food Everywhere” என்பதாகும்.