ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே 930 மெகாவாட் (MW) திறன் கொண்ட நீண்ட காலமாக நிலுவையில் இருந்த கிர்தாய்-II நீர்மின் திட்டத்தை அரசாங்கம் மீண்டும் துவங்கியுள்ளது.
சிந்து நதியின் முக்கிய துணை நதியான செனாப் நதி இமாச்சலப் பிரதேசத்தில் சந்திரா மற்றும் பாகா நதிகளின் சங்கமத்தால் உருவாகிறது.
வட இந்தியாவில் வானிலை முன்னறிவிப்பு மற்றும் பேரிடர் ஆயத்தப் பணிகளை வலுப்படுத்தும் வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் புதிய மண்டல வானிலை ஆய்வு மையம் (RMC) திறக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 100 தொழில் பூங்காக்களின் வளர்ச்சியை நன்கு விரைவுபடுத்தச் வதற்காக மத்திய அரசு BHAVYA இணையதளத்தை தொடங்கி வைத்தது.
பன்முக போக்குவரத்து இணைப்பு, நம்பகமான பயன்பாடுகள், டிஜிட்டல் ஆளுகை, தொழிலாளர் ஆதரவு வசதிகள் மற்றும் நிலையான உள்கட்டமைப்பு ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்த தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) தலைமைச் செயல் அதிகாரியான சவுரப் விஜய், IndiaAI திட்டத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார்.
நார்வே மகளிர் செஸ் போட்டியின் 2026-ஆம் ஆண்டிற்கான 3-வது பதிப்பில் கஜகஸ்தானின் பிபிசாரா அசாபயேவா வெற்றி பெற்றுள்ளார்.
பாரிஸில் நடைபெற்ற உலகச் சமத்துவமின்மை மாநாட்டில் ஜீன் ட்ரேஸ் 2026-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய சமத்துவமின்மை ஆராய்ச்சி விருதினைப் (GiRA) பெற்றார்.
வரலாற்றைப் பாதுகாப்பதிலும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதிலும் ஆவணக் காப்பகங்கள் மற்றும் பதிவேடுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 9-ஆம் தேதி சர்வதேச ஆவணக் காப்பக தினம் அனுசரிக்கப் படுகிறது.