2026 ஆம் ஆண்டிற்கான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேசப் பொருளாதார மன்றத்தின் (SPIEF) போது, Su-57 ஐந்தாம் தலைமுறையைச் சார்ந்த ரேடாருக்கு புலப்படாத போர் விமானத்தை கூட்டாக உருவாக்கி, உற்பத்தி செய்ய மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்காக இந்தியாவுடன் இணைய ரஷ்யா முன்வந்துள்ளது.
முன்னதாக, 2018 ஆம் ஆண்டில் ரஷ்யாவுடனான ஐந்தாம் தலைமுறை போர் விமான (FGFA) திட்டத்திலிருந்து இந்தியா விலகியது.
தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங், அந்நாட்டின் புதிய பிரதமராக ஹான் சியோங்-சூக்கை பரிந்துரைத்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் சீதாபூரில் உள்ள காலியான பாதுகாப்புத்துறை நிலத்தில், மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புடன் (BESS) கூடிய தனது முதல் 250 மெகாவாட் (MW) சூரியசக்தி மின் திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அஸ்ஸாமிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) துபாய்க்கு, புவிசார் குறியீடு (GI) பெற்ற தேஜ்பூர் லிச்சியின் முதல் ஏற்றுமதியை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) செயல்படுத்தியது.
தேஜ்பூர் லிச்சி 2013 ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு (GI) அந்தஸ்தைப் பெற்றது.
ஆந்த்ரோபிக் நிறுவனமானது, Claude Mythos 5 உடன் தனது மிகவும் திறன்வாய்ந்த, பரவலாக வெளியிடப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரியான Claude Fable 5-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் சர்வதேச நிலத் துறைமுகங்களில் செயல்பாடுகளை நிர்வகிப்பதற்கான டிஜிட்டல் தளமான நிலத் துறைமுக மேலாண்மை அமைப்பை (LPMS) – Vinimay, மத்திய உள்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
Vinimay தளமானது ஆவணப் பணிகளைக் குறைப்பதையும், எல்லை அனுமதி செயல்முறைகளை விரைவுபடுத்துவதையும், பாதுகாப்பை மேம்படுத்துவதையும் மற்றும் எல்லை தாண்டிய வர்த்தகத்தை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கிராமப்புற வீடுகளுக்கு ஒளியிழை அடிப்படையிலான அகலப்பட்டை இணைப்பை வழங்குவதற்காக, கங்கா (வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான அரசு ஆதரவுடைய வலைப்பின்னல்) என்ற திட்டத்தை உத்தரப் பிரதேசம் தொடங்கியது.
இத்திட்டம் சுமார் 20 லட்சம் குடும்பங்களை அதிவேக இணைய சேவைகளுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.