2026 ஆம் ஆண்டு ஜூன் 30 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இந்தியாவின் அடுத்த ராணுவத் தளபதியாக (COAS) லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமிக்கப் பட்டுள்ளார்.
எல்லை தாண்டிய ரயில்வே திட்டங்களை மதிப்பாய்வு செய்வதற்காக இந்தியாவும் நேபாளமும் நேபாளத்தின் காத்மாண்டுவில் 10வது திட்ட வழிகாட்டுதல் குழு (PSC) மற்றும் 8வது கூட்டுப் பணிக்குழு (JWG) கூட்டங்களை நடத்தின.
முன்மொழியப்பட்ட ஜனக்பூர்-அயோத்தி ரயில் இணைப்பு நேபாளத்தின் மாதேஷ் மாகாணத்தில் உள்ள ஜனக்பூரை உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியுடன் இணைத்து பயணிகள் போக்குவரத்து மற்றும் மத சுற்றுலாவை மேம்படுத்த உள்ளது.
ஒடிசாவின் பூரியைச் சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ரஷ்யாவில் நடைபெற்ற 2வது சர்வதேச மணல் சிற்ப விழாவில் ‘ரஷ்யா கிராண்ட் சாண்ட் மாஸ்டர் கோப்பை 2026’-ஐ வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிரேசில் மற்றும் இந்தோனேசியாவை பின்னுக்குத் தள்ளி, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது.
தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எறிகணை வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தில் (DRDL) மேம்பட்ட ஆயுத அமைப்பு வளாகத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
அடுத்த தலைமுறை உள்நாட்டு ஆயுத அமைப்புகளின் மேம்பாட்டிற்கு ஆதரவு அளிப்பதற்காக DRDO-வின் எறிகணை அமைப்புகள் மற்றும் உத்திசார் அமைப்புகள் குழுவால் இந்த வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் விளையாடும் உரிமையை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் மற்றும் வளர்ச்சியில் அதன் பங்கை முன்னிலைப்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 11 அன்று சர்வதேச விளையாட்டு தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Protect play, protect childhood” என்பதாகும்.
உலகளவில் குழந்தை தொழிலாளர் முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதை நிறுத்தவும் ஆண்டுதோறும் ஜூன் 12 அன்று உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Red card to child labour: Fair play for children, decent work for adults" என்பதாகும்.