இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் C-295 ராணுவப் போக்குவரத்து விமானம் ஆனது குஜராத்தின் வதோதராவில் தனது முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்தது.
நடுத்தர அளவிலான தந்திரோபாய ராணுவப் போக்குவரத்து விமானமான C-295 துருப்புக்கள் மற்றும் தளவாடங்களைக் கொண்டு செல்லவும், மனிதாபிமான மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது.
E100 (100% எத்தனால் கலவை) எரிபொருளுக்கு இந்தியா முழுமையான சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது, இது நெகிழ்வு-எரிபொருள் வாகனங்களை (FFVs) அறிமுகப்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கிறது.
எத்தனால் கலவை என்பது தூய்மையான மற்றும் அதிக நீடித்த எரிபொருளை உற்பத்தி செய்வதற்காக பெட்ரோலுடன் எத்தனாலைக் கலக்கும் செயல்முறை ஆகும்.
பிரதமர் நரேந்திர மோடி ஸ்லோவாக்கியாவிற்கு பயணம் மேற்கொண்டார் என்ற நிலையில் இது 1993 ஆம் ஆண்டில் அந்நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் அங்கு மேற்கொள்ளும் முதல் பயணமாகும்.
இந்தியாவும் ஸ்லோவாக்கியாவும் 1993 ஆம் ஆண்டில் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன. மேலும் வர்த்தகம், முதலீடு, புத்தாக்கம், வாகன உற்பத்தி, ரயில்வே மேம்பாடு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதித்தன.
INS Agray எனப்படும் அர்னாலா-வகுப்பைச் சேர்ந்த ஐந்தாவது நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு ஆழமற்ற நீர் போர் கப்பல் (ASW SWC), கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் (GRSE) நிறுவனத்தால் இந்தியக் கடற்படையிடம் ஒப்படைக்கப் பட்டது.
டெல்லி-மும்பை விரைவுச்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ராஜஸ்தானில் உள்ள முகுந்திரா மலைப் புலிகள் காப்பகத்தின் கீழ் இந்தியாவின் முதல் 8-வழி சுரங்கப் பாதை 2026 ஆம் ஆண்டு ஜூன் 20 அன்று திறக்கப்பட உள்ளது.
2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட டெல்லி-மும்பை விரைவுச்சாலையின் டெல்லி-வதோதரா பிரிவின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.
16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யவும், கடுமையான இணையவழி பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப் படுத்தவும் இங்கிலாந்து அரசு திட்டங்களை அறிவித்துள்ளதுடன் இந்த விதிகள் 2027 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கள் குடும்பங்களை ஆதரிப்பதற்காக பணம் அனுப்பும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 16 அன்று சர்வதேச குடும்பப் பணம் அனுப்பும் நாள் (IDFR) கடைபிடிக்கப் படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Remittances for Rural Resilience, Entrepreneurship and Employment என்பதாகும்.