வங்காள தேசமானது ராஜ்பாரி மாவட்டத்தில் பத்மா ஆற்றின் குறுக்கே பத்மா அணைக்கட்டு திட்ட கட்டுமானத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பத்மா ஆறு என்பது கங்கை நதியின் வங்காள தேசப் பகுதியாகும் என்ற நிலையில் இத்திட்டம் நாட்டின் தென்மேற்கு வறட்சிப் பகுதிகளில் நிலவும் தண்ணீர் பற்றாக் குறையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொலைதூர மலைப் பகுதிகளில் விரைவான அஞ்சல் தொடர்பை வழங்குவதற்காக, இந்தியாவின் முதல் ஆளில்லா விமான அடிப்படையிலான அஞ்சல் மற்றும் பொட்டலம் / பார்சல் பரிமாற்ற சேவையை இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி தலைமை அஞ்சலகம் மற்றும் ரெஹர்தார் கிளை அஞ்சலகம் இடையே அஞ்சல் துறை தொடங்கி உள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூரில் உள்ள லாம் பண்ணையின் மண்டல தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையமானது (RHRS) LCA-625 மற்றும் LCA-643 என்ற இரண்டு புதிய மிளகாய் ரகங்களை வெளியிட்டுள்ளது.
இந்தியக் கடற்படையின் INAS 330 ("தி ஹார்பூன்ஸ்/ஈட்டிகள்") 55 ஆண்டுகால சேவைக்குப் பிறகு பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது, இதன் மூலம் Sea King Mk 42B ஹெலிகாப்டர்கள் ஓய்வு பெறுகின்றன; இதற்கு மாற்றாக MH-60R Seahawks ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
வெறுப்புப் பேச்சின் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளவில் அதனைத் தடுக்கவும் மற்றும் எதிர்கொள்ளவும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக, சர்வதேச வெறுப்புப் பேச்சை எதிர்கொள்வதற்கான தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 18 அன்று அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு The Power of Partnerships in Countering Hate Speech என்பதாகும்.
திறந்தவெளி உணவு, இயற்கை மற்றும் சமூக ஒன்று கூடல்களைக் கொண்டாடும் வகையில், சர்வதேச சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 18 அன்று அனுசரிக்கப் படுகிறது.