2026 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2027 ஆம் ஆண்டு ஜூன் வரையிலான கால கட்டத்திற்கு நிதி நடவடிக்கை சிறப்புப் படையின் (FATF) துணைத் தலைவராக நியமிக்கப் பட்ட முதல் இந்தியர் விவேக் அகர்வால் ஆவார்.
பிரான்சின் நைஸ் நகரில் உள்ள கேலரீஸ் லாஃபாயெட் நைஸ் மாசேனாவில் ஒருங்கிணைந்த கட்டண இடைமுக (UPI) சேவைகளை இந்தியா தொடங்கியது.
சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பிரான்ஸ், மொரிஷியஸ், நேபாளம், பூடான், கத்தார், இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய 9 நாடுகளில் தற்போது UPI செயல் படுகிறது.
SpaceX நிறுவனத்தின் பங்கு விலை கடுமையாக உயர்ந்ததைத் தொடர்ந்து, அது அமேசான் ($2.66 டிரில்லியன்) நிறுவனத்தை முந்தி, $2.78 டிரில்லியன் மதிப்புடன் 2026 ஆம் ஆண்டில் உலகின் 5-வது மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
டிஜிட்டல் பயனர்களிடையே இணையப் பாதுகாப்பு மற்றும் நிதி மோசடிகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக என இந்திய ரிசர்வ் வங்கி (RBI) "Reelathon 2026" என்ற முன்னெடுப்பை இந்தியாவில் தொடங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் போலியான குறுஞ்செய்திகளை அனுப்புதல், முதலீட்டு மோசடிகள், டிஜிட்டல் கைதுகள், சட்டவிரோத கடன் செயலிகள் மற்றும் போலி வேலைவாய்ப்புகள் போன்ற இணைய மோசடிகளைத் தடுப்பதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
மங்கோலியாவின் உலான்பாதரில் நடைபெறவுள்ள 'கான் குவெஸ்ட் 2026' என்ற பன்னாட்டு அமைதி காக்கும் பயிற்சியில் இந்திய ராணுவக் குழு பங்கேற்க உள்ளது.
குடும்பம் மற்றும் சமூகத்தில் கவனிப்பாளர்கள், வழங்குநர்கள், ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிகளாக தந்தையர் மற்றும் தந்தை போன்றவர்களின் பங்கினை அங்கீகரித்து கௌரவிக்கும் வகையில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது மற்றும் 2026 ஆம் ஆண்டில் இது ஜூன் 21 அன்று அனுசரிக்கப்பட்டது.