TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 27 , 2026 13 hrs 0 min 13 0
  • ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி தங்கச் சுரங்கம் வணிக ரீதியான செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளதுடன், மேலும் இது ஜியோமைசூர் சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் இயக்கப் படுவதோடு சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் ஒரே தனியார் துறை முதன்மைத் தங்கச் சுரங்கமாக இது விளங்குகிறது.
    • இது ராயலசீமா பகுதியில் அமைந்துள்ளது மற்றும் 2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் சோதனை உற்பத்தியைத் தொடங்கியது.
  • செயின்ட் ஹெலினா தீவில் வசிக்கும் செஷல்ஸ் ராட்சத ஆமையான ஜொனாதன், உலகின் மிக வயதான நிலவாழ் விலங்கு ஆகும், மேலும் இது கின்னஸ் உலக சாதனை சின்னமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • இந்திய சட்ட நிபுணரான பேராசிரியர் பிமல் N. படேல், 2026-2035 ஆம் ஆண்டிற்கான கடல் சட்டத்திற்கான சர்வதேச தீர்ப்பாயத்தின் (ITLOS) நீதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • விளையாட்டு மேம்பாட்டிற்கான தனது பங்களிப்புகளுக்காக, பீகார் கிரிக்கெட் சங்கத்தின் (BCA) தலைவரான ஹர்ஷ் வர்தன், லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் பிரபுக்கள் சபையில் 'குளோபல் பிரெஸ்டீஜ்' விருதினைப் பெற்று கௌரவிக்கப்பட்டார்.
  • கர்நாடகாவின் மங்களூருவில் புதிய உத்திசார் பெட்ரோலிய இருப்பு (SPR) ஒன்றை அமைக்கும் பணி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்திற்கு (ONGC) ஒதுக்கப் பட்டுள்ளது.
  • தூதுறவு மற்றும் சர்வதேச முடிவெடுப்பதில் பெண்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 24 அன்று 'சர்வதேச தூதுறவுப் பெண்கள் தினம்' அனுசரிக்கப்படுகிறது.
  • உலகளாவிய வர்த்தகம் மற்றும் உலகப் பொருளாதாரத்திற்கு கடலோடிகளின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25 அன்று 'கடலோடிகள் தினம்' அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Carrying world trade. Carrying the risks என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்