TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 6 , 2026 2 days 75 0
  • சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் நகரில் நடைபெற்ற உலக துடுப்புப் படகுப் போட்டியின் ஆடவருக்கான இலகுரக இரட்டையர் துடுப்புப் படகுப் பிரிவில் (LM2x) இந்திய ராணுவ வீரர்களான ஹவில்தார் லக்ஷய் மற்றும் உஜ்வால் குமார் சிங் ஆகியோர் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றனர்.
  • இந்திய விமானப்படை (IAF) 5-வது போர் மற்றும் விண்வெளி வியூகத் திட்டத்தை (WASP) 2026 ஆம் ஆண்டு ஜூன் 29 அன்று புது தில்லியில் நிறைவு செய்தது.
    • இத்திட்டம் இடைநிலை அதிகாரிகளுக்காக 2022-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு தொழில்முறை இராணுவக் கல்வி (PME) முன்னெடுப்பாகும்.
  • அமெரிக்காவால் ஹவாயில் நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய பன்னாட்டுக் கடற் படைப் பயிற்சியான 'ரிம்பேக்' 2026-இன் (RIMPAC 2026) 30-வது பதிப்பில் இந்திய ஆயுதப் படைகள் பங்கேற்றன.
  • ஈதன் வாஸ் மற்றும் ஹர்ஷவர்தன் ஜி.பி. ஆகியோர் இந்தியாவின் புதிய செஸ் கிராண்ட்மாஸ்டர்களாக (GM) அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் இந்தியாவின் 96-வது மற்றும் 97-வது கிராண்ட்மாஸ்டர்களாக மாறினர்.
  • இந்தியாவின் டிஜிட்டல் சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தின் (ABDM) கீழ் ஒருங்கிணைந்த சுகாதார இடைமுகத்தை (UHI) தேசிய சுகாதார ஆணையம் (NHA) விரிவுபடுத்துகிறது.
    • ஒருங்கிணைந்த சுகாதார இடைமுகம் (UHI) என்பது பல்வேறு டிஜிட்டல் சுகாதாரப் பயன்பாடுகள் மூலம் நோயாளிகளை சுகாதார சேவை வழங்குநர்களுடன் இணைக்கும் ஒரு திறந்த நெறிமுறையாகும்.
  • விளையாட்டுச் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களைக் கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 2 அன்று உலக விளையாட்டுச் செய்தியாளர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு Championing Fair Play: Reporting with Integrity and Impact என்பதாகும்.
  • நிலையான வளர்ச்சி மற்றும் சமூக நலனில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5 அன்று சர்வதேச கூட்டுறவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு Cooperatives for a Peaceful World என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்