TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 11 , 2026 7 days 62 0
  • ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் (CERN) தனது மிகப்பெரிய துகள் முடுக்கியின் (LHC) முக்கிய மேம்பாட்டுப் பணிகளுக்காக 2026 முதல் 2030 ஆம் ஆண்டு வரை மூன்றாவது நீண்ட கால நிறுத்தத்தை (LS3) தொடங்கியுள்ளது.
    • மிகப்பெரிய துகள் முடுக்கியானது (LHC), உயர் ஒளிரும் மிகப்பெரிய துகள் முடுக்கியாக (HL-LHC) மாற்றப்படவுள்ளதுடன் இது அதன் ஒளிரும் திறனை அதன் அசல் வடிவமைப்புத் திறனை விட 10 மடங்கு வரை அதிகரிக்கும்.
  • இந்திய கடற்படையானது, திட்டம் 17A என்ற திட்டத்தின் கீழான உள்நாட்டிலேயே கட்டப்பட்ட ஆறாவது எதிரிகளுக்குப் புலப்படாத போர்க்கப்பலான ஐ.என்.எஸ் மகேந்திரகிரியை (F38) விசாகப்பட்டினத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளது.
  • இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையேயான உயர்கல்வி ஒத்துழைப்பை வலுப் படுத்தும் விதமாக, பெங்களூரு இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM Bangalore) தனது முதல் வெளிநாட்டு வளாகத்தை இந்தோனேசியாவின் சிங்காசாரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைக்கவுள்ளது.
  • கன்னியாகுமரியைச் சேர்ந்த அஸ்வத் S, 2026 ஆம் ஆண்டு புனேவில் நடைபெற்ற சர்வதேச கிராண்ட்மாஸ்டர் ரவுண்ட் ராபின் போட்டியில் தனது இறுதி GM தகுதியை அடைந்ததன் மூலம் இந்தியாவின் 98வது செஸ் கிராண்ட்மாஸ்டர் (GM) ஆனார்.
  • ஹரியானாவில் புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற முதல் பழம் என்ற பெருமையை 'சிர்சா கின்னோ' பெற்றுள்ளது.
    • அப்பகுதியின் தனித்துவமான தட்பவெப்பநிலை காரணமாக அதன் இனிமையான சுவை, அதிக சாறு, பெரிய அளவு மற்றும் பிரகாசமான நிறத்திற்காக சிர்சா கின்னோ அறியப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்