இமாச்சல பிரதேசத்தின் லாஹுல் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள கீலாங்கில், இந்தியாவின் முதலாவது அதி-உயர மருத்துவ மற்றும் பொது சுகாதார ஆராய்ச்சி மையத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ICMR) அமைக்கிறது.
திண்டுக்கல் ஐ. லியோனிக்குப் பதிலாக, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக லயோலா மணியை மூன்று ஆண்டு காலத்திற்கு தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகத்தில் (IPRC), வரவிருக்கும் LVM3-M7 (ஏவு வாகனம் Mark-3 திட்டம்-7) திட்டத்திற்கான உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட CE20 மீக்குளிர் நிலையிலான இயந்திரத்தின் விமான ஏற்புக்கான நேரடிச் செயல் முறைச் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
CE20 என்பது இந்தியாவின் மிகக் கனமான செயல்பாட்டு ஏவு வாகனமான LVM3-இன் மேல் நிலைக்கு ஆற்றலளிக்கும் ஒரு உள்நாட்டு அதிக உந்துவிசை கொண்ட மீக்குளிர் நிலையிலான ஏவுகல இயந்திரமாகும்.
2026 ஆம் ஆண்டு ஜூலை 11 அன்று வியட்நாமின் பூ குவாக் (Phu Quoc) பகுதியில் உள்ள மே ரட் ங்கோய் தீவு அருகே அதிவேகப் படகு கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.
குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள பாதஜ் பகுதியில் 2026 ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று ஒரே மணி நேரத்தில் 3.61 லட்சம் மரக்கன்றுகளை நட்டு கின்னஸ் உலக சாதனை படைக்கப் பட்டுள்ளது.
ONGC நிறுவனம் 2026 ஆம் ஆண்டு ஜூலையில் லடாக்கின் புகா பள்ளத்தாக்கில் தனது இரண்டாவது புவி வெப்பக் கிணற்றை தோண்டும் பணியை நிறைவு செய்துள்ளது.
அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான சிறந்த எக்மாண்ட் வழக்கு விருதில் (BECA) இந்தியாவின் நிதி உளவுப் பிரிவு-இந்தியா (FIU-IND) இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
ஒரு பெரிய அளவிலான சைபர் மோசடி மற்றும் பணமோசடி வலையமைப்பைக் கண்டறிந்த FIU-IND-இன் விசாரணையைப் பாராட்டி இந்த விருது வழங்கப் பட்டு உள்ளது.