TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 16 , 2026 13 days 84 0
  • இமாச்சல பிரதேசத்தின் லாஹுல் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள கீலாங்கில், இந்தியாவின் முதலாவது அதி-உயர மருத்துவ மற்றும் பொது சுகாதார ஆராய்ச்சி மையத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ICMR) அமைக்கிறது.
  • திண்டுக்கல் ஐ. லியோனிக்குப் பதிலாக, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக லயோலா மணியை மூன்று ஆண்டு காலத்திற்கு தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
  • மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகத்தில் (IPRC), வரவிருக்கும் LVM3-M7 (ஏவு வாகனம் Mark-3 திட்டம்-7) திட்டத்திற்கான உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட CE20 மீக்குளிர் நிலையிலான இயந்திரத்தின் விமான ஏற்புக்கான நேரடிச் செயல் முறைச் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
    • CE20 என்பது இந்தியாவின் மிகக் கனமான செயல்பாட்டு ஏவு வாகனமான LVM3-இன் மேல் நிலைக்கு ஆற்றலளிக்கும் ஒரு உள்நாட்டு அதிக உந்துவிசை கொண்ட மீக்குளிர் நிலையிலான ஏவுகல இயந்திரமாகும்.
  • 2026 ஆம் ஆண்டு ஜூலை 11 அன்று வியட்நாமின் பூ குவாக் (Phu Quoc) பகுதியில் உள்ள மே ரட் ங்கோய் தீவு அருகே அதிவேகப் படகு கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.
  • குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள பாதஜ் பகுதியில் 2026 ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று ஒரே மணி நேரத்தில் 3.61 லட்சம் மரக்கன்றுகளை நட்டு கின்னஸ் உலக சாதனை படைக்கப் பட்டுள்ளது.
  • ONGC நிறுவனம் 2026 ஆம் ஆண்டு ஜூலையில் லடாக்கின் புகா பள்ளத்தாக்கில் தனது இரண்டாவது புவி வெப்பக் கிணற்றை தோண்டும் பணியை நிறைவு செய்துள்ளது.
  • அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான சிறந்த எக்மாண்ட் வழக்கு விருதில் (BECA) இந்தியாவின் நிதி உளவுப் பிரிவு-இந்தியா (FIU-IND) இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
    • ஒரு பெரிய அளவிலான சைபர் மோசடி மற்றும் பணமோசடி வலையமைப்பைக் கண்டறிந்த FIU-IND-இன் விசாரணையைப் பாராட்டி இந்த விருது வழங்கப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்