மத்திய அரசானது, தமிழகத் தலைமைச் செயலாளர் எம். சாய் குமாருக்கு 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 முதல் 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 வரை ஆறு மாத காலப் பணி நீட்டிப்பை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகப் போராட ‘தூஃபான் நடவடிக்கை’ என்ற போதைப் பொருள் எதிர்ப்புப் பிரச்சாரத்தின் மூலம் ஒத்துழைப்பை வலுப்படுத்த கேரளாவும் தமிழ் நாடும் முடிவு செய்துள்ளன.
இப்பிரச்சாரம் எல்லைக் கண்காணிப்பு, உளவுத் தகவல் பகிர்வு மற்றும் போதைப் பொருள் கடத்தல் வலையமைப்புகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனமானது (CMFRI) தெற்கு கேரளாவின் அரபிக்கடல் பகுதியில் 'சைட்டோப்சிஸ் இண்டிகா' என்ற புதிய ஆழ்கடல் மீன் இனத்தைக் கண்டறிந்து உள்ளது.
இது பொதுவாக 'டோரிகள்' என்று அழைக்கப்படும் கடல் மீன்களின் 'சைட்டோப்சிஸ்' பேரினத்தைச் சேர்ந்தது மற்றும் இது 'இந்தியன் டோரி' என்று அழைக்கப்படுகிறது.
டெல்லி தியாகராஜ் விளையாட்டு மையத்தில் 2026 ஆம் ஆண்டு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான 22-வது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பின் அதிகாரப்பூர்வ சின்னமான 'மயூர்' (Mayur) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
மணல் மற்றும் தூசிப் புயல்கள் (SDS) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு மூலம் அவற்றின் தாக்கங்களைக் குறைக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 12 அன்று சர்வதேச மணல் மற்றும் தூசிப் புயல்கள் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "From Source to Impact: Protecting Land and Life from Sand and Dust Storms" என்பதாகும்.
பிரெஞ்சு புரட்சியின் தொடக்கத்தைக் குறித்த, 1789 ஆம் ஆண்டில் பாரிஸில் உள்ள பாஸ்டில் சிறைச்சாலை தகர்க்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14 அன்று பிரான்சின் தேசிய தினமாக பாஸ்டில் தினம் கொண்டாடப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Strategic Awakening" என்பதாகும்.
உலகெங்கிலும் உள்ள மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவும், பாதுகாப்பான மற்றும் நெறிமுறை சார்ந்த மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15 அன்று உலக மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Changing lives with Plastic and Reconstructive Surgery" என்பதாகும்.