TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 19 , 2026 8 days 54 0
  • தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு, தொழிலாளர் பங்கேற்பு, திறன் மேம்பாடு மற்றும் தொழிலாளர்களுக்கான டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் குறித்து விவாதிக்க தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர்களின் 12வது பிரிக்ஸ் மாநாட்டை (LEMM) 2026 ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் தலைமையின் கீழ் இந்தியா ஹைதராபாத்தில் நடத்தியது.  
    • இதன் கருத்துரு "Building for Resilience, Innovation, Cooperation and Sustainability (BRICS)" என்பதாகும்.
  • இலங்கை, மொரட்டுவாவில் நடைபெற்ற முதலாவது மகளிர் T20I காது கேளாதோர் கிரிக்கெட் தொடரில், இந்தியக் காது கேளாத மகளிர் கிரிக்கெட் அணி இலங்கையை 5–0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
  • இந்தியா முழுவதும் உள்ள சுமார் 15,000 புனிதக் காடுகளைப் பாதுகாப்பதற்கும் மீட்டெடுப்பதற்கும் தேசிய ஈடுசெய் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம் (CAMPA) 'ஆஸ்தா வன சம்ரக்‌ஷன் யோஜனா' என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
    • இத்திட்டம் 2026-27 முதல் 2030-31 ஆம் ஆண்டு வரையிலான காலத்திற்கு ₹3,000 கோடி ஒதுக்கீட்டைக் கொண்டுள்ள நிலையில் மேலும், இது சமூகம் சார்ந்த பாதுகாப்பு, பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மீள்திறன் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.
  • 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நியூசிலாந்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரம்பரியமான 'மாவோரி போவ்ஹிரி' (Māori Pōwhiri) முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • 'மாவோரி போவ்ஹிரி' என்பது நியூசிலாந்தின் பூர்வீக பாலினேசிய மக்களான மாவோரி மக்களின் பாரம்பரிய வரவேற்பு விழாவாகும்.
  • இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்புகளை மேம்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15 அன்று உலக இளைஞர்கள் திறன் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • பாம்புகள், அவற்றின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளில் அவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16 அன்று உலகப் பாம்புகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Respect, Don't Fear: Protecting Nature's Silent Guardians” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்