TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 20 , 2026 7 days 117 0
  • போக்குவரத்துத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக மகாராஷ்டிராவின் நாக்பூரில் நடைபெற்ற மூன்றாவது பிரிக்ஸ் (BRICS) போக்குவரத்து அமைச்சர்கள் கூட்டத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் அமைச்சர்கள் அளவிலான பிரகடனம் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
    • இந்தப் பிரகடனமானது, பிரிக்ஸ் நாடுகளிடையே தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு, நிலையான போக்குவரத்து, இணைப்பு மற்றும் மீள்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • கொலம்பியாவின் புகரமங்காவில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான 56-வது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட்டில் (IPhO), இந்திய அணியின் ஐந்து குழு விளையாட்டு வீரர்களும் தங்கப் பதக்கங்களை வென்றதை அடுத்து, இந்தியா கூட்டாக முதலிடத்தைப் பிடித்தது.
    • 87 நாடுகளைச் சேர்ந்த 381 மாணவர்களுக்கிடையே நடைபெற்ற இப்போட்டியில் சீனா, கஜகஸ்தான், ரஷ்யா, தென் கொரியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளுடன் இந்தியா முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டது.
  • பிராண்ட் ஃபைனான்ஸ் இந்தியா 100–2026 அறிக்கையில், இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் வலிமையான டயர் பிராண்டாக MRF டயர்ஸ் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளது.
  • ஹார்முஸ் நீர்ச்சந்தியில் எம்டி அல் பாஹியா (MT Al Bahiyah) மற்றும் எம்டி மொம்பாசா (MT Mombasa) ஆகிய வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு, இந்தியா "கடலோடிகளுக்கு முதலிடம்" என்ற அவசரக்கால கடல்சார் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
    • பாரசீக வளைகுடா, ஹார்முஸ் நீர்ச்சந்தி மற்றும் ஓமன் வளைகுடா ஆகிய பகுதிகளில் செயல்படும் இந்திய மாலுமிகளை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது.
  • தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் (NCM) தலைவராக ஹர்ஜித் சிங் கிரேவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • JMK ரிசர்ச் (JMK Research) அமைப்பின் தகவலின்படி, 2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியா சாதனை அளவாக 29 ஜிகாவாட் (GW) சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தித் திறனைச் சேர்த்துள்ளது; இதில் 26 ஜிகாவாட் சூரிய ஆற்றல் திறனும், 2.9 ஜிகாவாட் காற்றாலை ஆற்றல் திறனும் அடங்கும்.
  • செயற்கை நுண்ணறிவின் (AI) மேம்பாடு, தாக்கம் மற்றும் பொறுப்பான பயன்பாடு குறித்த சிந்தனையை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16 அன்று செயற்கை நுண்ணறிவு பாராட்டுத் தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Celebrating Intelligence with Purpose என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்