TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 22 , 2026 13 hrs 0 min 44 0
  • மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள ஜக்கூரில் 'வெள்ளை ராபிட் தொழில்நுட்பம்' அடிப்படையிலான இந்தியத் திட்ட நேர (IST) விநியோக விளக்க வலைப்பின்னலைத் தொடங்கி வைத்தார்.
    • 'வெள்ளை ராபிட் தொழில்நுட்பமானது' வங்கி, பங்குச் சந்தைகள், டிஜிட்டல் பரிவர்த்தனைகள், தொலைத்தொடர்பு, பாதுகாப்பு மற்றும் மின் தொகுப்புகள் போன்ற துறைகளுக்கு மிகத் துல்லியமான நேர ஒத்திசைவைச் செயல்படுத்துகிறது.
  • கீர் ஸ்டார்மர் பதவி விலகியதைத் தொடர்ந்து, கிரேட்டர் மான்செஸ்டரின் முன்னாள் மேயரான ஆண்டி பர்ன்ஹாம், 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஐக்கியப் பேரரசின் (UK) ஏழாவது பிரதமராகப் பதவியேற்றார்.
  • 2026 ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற ஜப்பான் ஓபன் சூப்பர் 750 மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், முன்னாள் உலக சாம்பியனான ஜப்பானின் அகானே யமகுச்சியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை என்ற பெருமையை பி.வி. சிந்து பெற்றார்.
  • மத்திய உள்துறை அமைச்சர், கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலக வளாகத்தில் இந்தியாவின் முதல் ஆழ்ந்த அனுபவத்தை வழங்கும் மொழி அருங்காட்சியகமான "சப்தலோக் (வார்த்தைகளின் அருங்காட்சியகம்)"-ஐ திறந்து வைத்தார்.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் 100 மில்லியன் டன் (MT) நிலக்கரி வாயுவாக்கல் திறனை அடைவதை தேசிய நிலக்கரி வாயுவாக்கல் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என நிலக்கரி அமைச்சகம் அறிவித்துள்ளது.
    • இத்திட்டம் ஆண்டுக்கு சுமார் 75 மில்லியன் டன் (MTPA) நிலக்கரியைப் பயன்படுத்துவதையும், தகுதியான ஆலை மற்றும் இயந்திரச் செலவில் 20% வரை நிதிச் சலுகைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1924 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE) நிறுவப் பட்டதை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 ஆம் தேதி சர்வதேச சதுரங்க தினம் அனுசரிக்கப் படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Celebrate, create and make a difference என்பதாகும்.
  • நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் (பஸ்) ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் நடந்த முதல் மனிதர்களாக சாதனை படைத்த அப்பல்லோ 11 திட்டத்தின் (1969 ஆம் ஆண்டு ஜூலை 20) 57வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், 2026 ஜூலை 20 அன்று சர்வதேச நிலவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "One Moon, One Vision, One Future" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்