TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 25 , 2026 4 days 51 0
  • உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான 58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் (IChO) போட்டியில் 4 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியா இதுவரை இல்லாத அளவில் தனது சிறந்த செயல்பாட்டைப் பதிவு செய்து உள்ளது.
    • இந்தியக் குழுவில் தேவதத்தா பிரியதர்ஷி (ஒடிசா), ஹர்ஷித் சிங்லா (பஞ்சாப்), கபீர் சில்லர் (டெல்லி) மற்றும் சந்தீப் குச்சி (தெலுங்கானா) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர், இவர்கள் அனைவரும் தங்கப் பதக்கங்களை வென்றனர்.
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது (MeitY) 'ஸ்வயான்' (SwaYaan) முன்னெடுப்பின் கீழ் ஆளில்லா விமானப் பயன்பாடு மற்றும் ஆராய்ச்சிக்கான தேசியக் கண்டுபிடிப்பு சவாலை (NIDAR 2.0, 2026-27) அறிமுகப்படுத்தியது.
    • இந்திய ஆளில்லா விமானக் கூட்டமைப்புடன் இணைந்து தொடங்கப்பட்ட NIDAR 2.0, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குறைக்கடத்தி சில்லுகளால் இயங்கும் ஆளில்லா விமானங்களை உருவாக்குவதையும் மற்றும் உள்நாட்டு ஆளில்லா விமானத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • புவிவெளித் தொழில்நுட்பங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்த 5-வது பிரிக்ஸ் (BRICS) பணிக்குழு கூட்டத்தை திருப்பதி இந்திய தொழில்நுட்பக் கழகம் தொகுத்து வழங்கியது.
    • பேரிடர் மேலாண்மை, வேளாண்மை, நகர்ப்புற திட்டமிடல், போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு போன்ற பகுதிகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை இக்கூட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஜப்பானின் டகேடா பயோஃபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் உருவாக்கிய டெங்கு தடுப்பூசியான க்யூடெங்கா (QDENGA), இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரியிடம் (DCGI) சந்தை அங்கீகாரத்தைப் பெற்று, இந்தியாவின் முதல் அங்கீகரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசியாக மாறியுள்ளது.
  • மேம்பட்ட வான்வழி நகர்வுக்கான (AAM) ஒரு முக்கிய படியாக, சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தால் உருவாக்கப்பட்ட புத்தொழில் நிறுவனமான The ePlane Company உருவாக்கிய இந்தியாவின் முதல் மின்சார செங்குத்து ஏவுதல் மற்றும் தரையிறங்கும் (eVTOL) விமானத்தின் முன்மாதிரியை இந்தியா வெளியிட்டது.
  • இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக, 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் சாந்தலி மொழி குறும்படமான Angen (Invisible) தேசிய திரைப்பட விருதை வென்றது, இதன் இயக்குநர் ரவி ராஜ் முர்முவுக்கு ஒரு இயக்குநரின் சிறந்த அறிமுகப் படத்திற்கான விருது (புனைகதை அல்லாத பிரிவு) வழங்கப்பட்டது.
  • பை (pi - π) என்ற கணித மாறிலியை அதன் பொதுவான பின்னத் தோராயமான 22/7 ஐப் பயன்படுத்தி கொண்டாடுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22 அன்று பை தோராய தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Mathematics and Hope" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்