2026 ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் (CWG) மகளிர் 75 கிலோ எடைப்பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்ததன் மூலம் இந்தியா தனது முதல் பதக்கத்தைப் பெற்றுள்ளது.
தகுதியான UPI விரைவுப் பதிலளிப்பு (QR) குறியீடுகளை வருடுவதன் மூலம் ஊழியர்கள் தங்கள் உணவு அட்டை இருப்பிலிருந்து பணம் செலுத்த அனுமதிக்கும், இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த கட்டண இடைமுக (UPI) வசதியுடன் கூடிய உணவு அட்டையை 'என்கேஷ்' (EnKash) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
திருத்தப்பட்ட வருமான வரி விதிகளின் கீழ் (2026 ஆம் ஆண்டு 1 ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது), வரி இல்லாத உணவுப்படி வரம்பு மாதத்திற்கு ₹8,800 அல்லது ஒரு வேளை உணவிற்கு ₹200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று ஒடிசாவில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து 'குஷா' (Kusha) நீண்ட தூரம் தரையிலிருந்து வான் நோக்கிப் பாயும் எறிகணையின் (LR-SAM) முதல் கட்டப் பரிசோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) வெற்றிகரமாக நடத்தியது.
350 கிலோ உந்துவிசை பிரிவில் இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய டர்போஜெட் இயந்திரத்தை (ETJE) DRDO உருவாக்கியுள்ளது.
கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், மாஹே-வகுப்பு ஆழ்கடல் அல்லாத பகுதிகளில் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர் நடவடிக்கைகளுக்கான கப்பலான (ASW-SWC) ஐஎன்எஸ் மால்வனை இந்தியக் கடற்படை சேவையில் இணைத்துள்ளது.
குளோபல் ஃபைனான்ஸ் அமைப்பின் 2026 உலகளாவிய வங்கி விருதுகளில் டிபிஎஸ் (DBS) குழுமம் "உலகின் சிறந்த பெருநிறுவன வங்கி" என்று பெயரிடப்பட்டுள்ளது.
உலகளவில் நீரில் மூழ்கி இறப்பதைத் தடுப்பதை ஊக்குவிக்கவும், அதனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 25 அன்று உலக நீரில் மூழ்கி இறப்பதைத் தடுக்கும் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Unite to turn the tide என்பதாகும்.