ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தடைகள் காரணமாக அர்காடி ட்வோர்கோவிச் பதவியிலிருந்து விலகியதையடுத்து, சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் (FIDE) இடைக்காலத் தலைவராக முன்னாள் உலக சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பொறுப்பேற்றுள்ளார்.
ஹைதராபாத்தை சேர்ந்த பாணினியன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது, இந்தியாவின் முதல் தனியார் துறை டர்போஃபேன் (turbofan)பொறி இயந்திர மேம்பாட்டுத் திட்டமான யந்தூர் (Yantur) என்பதை வெளியிட்டது.
4.5 கிலோநியூட்டன் (kN) திறன் கொண்ட இந்த டர்போஃபேன் பொறி இயந்திரமானது Svayatt L1 நீண்ட தூரம் தன்னிச்சையாக இயங்கக்கூடிய சீர்வேக எறிகணைத் தளத்திற்காக உருவாக்கப்படுகிறது.
Sarbat.AI முன்னெடுப்பின் கீழ், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிப் பாடத் திட்டத்தில் செயற்கை நுண்ணறிவை (AI) ஒரு முக்கியப் பாடமாக அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலமாக பஞ்சாப் உருவெடுத்துள்ளது.
டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத் திறன்களுடன் கூடிய, செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த அறிவும் புதுமைப் புனைவு சார்ந்த அணுகுமுறையும் கொண்ட ஒரு மாணவர் சமூகத்தை உருவாக்குவதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாட்ரிட் மற்றும் அவிலா மாகாணங்களில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீ காரணமாக ஸ்பெயின் நாடு முதல் முறையாக தேசிய அவசர நிலையை அறிவித்து உள்ளது.
2026 ஆம் ஆண்டில் ஸ்பெயினில் 100,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலங்கள் எரிந்துள்ளன, மேலும் காட்டுத்தீ காரணமாக 13 இறப்புகள் பதிவாகியுள்ளன.
'செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த முதல் அறிவியல் அறிக்கை' என்பது, ஐக்கிய நாடுகள் சபையின் (UN) ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட, செயற்கை நுண்ணறிவு குறித்த சுயாதீன சர்வதேச அறிவியல் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட ஒரு முதற்கட்ட அறிவியல் மதிப்பீடாகும்.
செயற்கை நுண்ணறிவு அறிவியல் முன்னேற்றங்கள்; சுகாதாரம், கல்வி மற்றும் வேளாண்மைத் துறைகளில் அதன் பயன்பாடுகள்; பொருளாதார விளைவுகள்; பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மீதான தாக்கங்கள்; மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம்; கலாச்சாரம் மற்றும் தனிநபர் நல்வாழ்வு; அத்துடன் நிர்வாகம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியன இவ்வறிக்கையின் 7 கருத்துருக்களாகும்.
சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியானது, தமிழ்நாட்டில் ISO 9001:2015 சான்றிதழைப் பெற்ற முதல் அரசுத் தொடக்கப் பள்ளி ஆனது.
கொண்டப்பநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள 71 ஆண்டுகள் பழமையான இந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, இம்மாவட்டத்தில் இத்தகைய அங்கீகாரத்தைப் பெறும் முதல் அரசுத் தொடக்கப் பள்ளியாகும்.