சீனாவின் செயற்கை நுண்ணறிவு (AI) புத்தொழில் நிறுவனமான மூன்ஷாட் AI (Moonshot AI), உலகின் முதல் திறந்த மூல 3-டிரில்லியன்-அளவுருக்கள் கொண்ட செயற்கை நுண்ணறிவு மாதிரியான கிமி K3-ஐ அறிமுகப்படுத்தியது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் (CWG) ஆடவர் 65 கிலோ எடைப்பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பறவைகள் சரணாலயமானது, மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள தானே க்ரீக் ஃபிளமிங்கோ சரணாலயத்தில் (TCFS) உருவாக்கப்பட்டு வருகிறது.
TCFS ஒரு அங்கீகரிக்கப்பட்ட ராம்சார் தளமாகவும், மத்திய ஆசிய பறவைகள் வழித்தடத்தில் ஒரு முக்கிய நிறுத்தமாகவும் விளங்குகிறது.
மத்திய அரசு, மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அனுராக் ஜெயினை நிதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமித்துள்ளது.
பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) வெளியிட்ட அதிகாரப்பூர்வ உத்தரவின் படி, இந்த நியமனத்திற்கு அமைச்சரவையின் நியமனக் குழு (ACC) ஒப்புதல் அளித்துள்ளது.
மக்கள், சமூகங்கள் மற்றும் நாடுகளிடையே அமைதி, ஒற்றுமை, பரஸ்பர புரிதல் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30 அன்று சர்வதேச நட்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஆட்கடத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், சுரண்டலால் பாதிக்கப் பட்டவர்களைப் பாதுகாப்பதற்காகவும் ஜூலை 30 அன்று ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Trapped Behind the Scam” என்பதாகும்.