TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 31 , 2026 2 days 36 0
  • கோசி - மேச்சி மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் இணைப்புத் திட்டத்தை 2029 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக மத்திய அரசு ₹3,652.56 கோடி நிதி உதவியை அங்கீகரித்துள்ளது.
    • பீகாரில் உள்ள கோசி மற்றும் மேச்சி நதி அமைப்புகளை இணைப்பதன் மூலம் நீர்ப்பாசன வசதியை மேம்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சீனா தனது "செயற்கை சூரியன்" அணுக்கரு இணைவுத் திட்டத்திற்காக உலகின் மிகப்பெரிய 582 டன் எடை கொண்ட மீக்கடத்து காந்தத்தை வெற்றிகரமாக உருவாக்கி முடித்துள்ளது.
    • இந்த காந்தமானது பர்னிங் பிளாஸ்மா எக்ஸ்பெரிமென்டல் சூப்பர்கண்டக்டிங் டோகாமாக் (BEST) உலையில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பப்படுத்தப்பட்ட பிளாஸ்மாவை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும்.
  • மேற்கு வங்கத்தின் கொல்கத்தா துறைமுகத்தில் இருந்து நேபாளத்தின் பிராட்நகர் சுங்க முனையத்திற்கு முதன்முறையாக நேரடி வணிகக் கொள்கலன் சரக்கு ரயிலை இந்திய ரயில்வே இயக்கியது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான அகர்தலாவின் கர்ச்சி பூஜையானது பூமித்தாயின் மாத விடாயைக் குறிப்பதாக நம்பப்படும் ஆமா பேச்சி (அம்பு பாச்சி) காலத்திற்குப் பிறகு அனுசரிக்கப்படுகிறது.
    • இவ்விழா பூமித்தாயின் சடங்கு ரீதியான தூய்மைப்படுத்துதலைக் குறிக்கிறது என்பதோடு இக்காலத்தில் உழுதல், தோண்டுதல் மற்றும் சில மங்களகரமான செயல்கள் தவிர்க்கப் படுகின்றன.
  • 2027 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1), வைப்புத்தொகையை விட கடன்கள் வேகமாக வளர்ந்ததால், இந்திய வங்கிகளின் கடன்-வைப்பு (CD) விகிதம் 62 ஆண்டுகளில் இல்லாத உச்சபட்சமாக 82.6% ஆக இருந்தது என இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையத்தின் (CMIE) தரவுகளின்படி கண்டறியப் பட்டுள்ளது.
    • கடந்த ஐந்து ஆண்டுகளில், வங்கிகள் தங்கள் இருப்புநிலைக் குறிப்பில் அதிகப் படியான முதலீடுகளைக் கொண்டிருந்தன என்ற நிலையில் அவற்றை அவை கடன்களாக மாற்றியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்