ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பிளாஸ்டினேஷன் (plastination) முறையைக் கண்டுபிடித்தவரும், BODY WORLDS கண்காட்சிகளை உருவாக்கியவருமான டாக்டர் குந்தர் வான் ஹேகன்ஸ் 2026 ஆம் ஆண்டு ஜூலை 24 அன்று தனது 81 ஆவது வயதில் காலமானார்.
பிளாஸ்டினேஷன் என்பது உடல் திரவங்கள் மற்றும் கொழுப்புகளுக்குப் பதிலாக பாலிமர்களைக் கொண்டு மாற்றி, நீண்ட கால ஆய்வுகளுக்காக உடற்கூறியல் மாதிரிகளைப் பாதுகாக்க உதவும் ஒரு முறையாகும்.
அமெரிக்கா முதன்முறையாக குவாமில் (Guam) டார்க் ஈகிள் அதிமீயொலி எறிகணை அமைப்பை நிறுவியுள்ளது.
நீண்ட தூரம் செல்லக்கூடிய அதிமீயொலி ஆயுதம் (LRHW) என்றும் அழைக்கப்படும் டார்க் ஈகிள், அமெரிக்க ராணுவத்திற்காக உருவாக்கப்பட்ட அணுஆயுதமற்ற, தரையிலிருந்து ஏவப்படும் அதிமீயொலி எறிகணை அமைப்பாகும்.
இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகமானது (IACS) 2026 ஆம் ஆண்டு ஜூலை 29 அன்று நிறுவப்பட்டு 150 ஆண்டுகளை நிறைவு செய்தது.
இந்தியர்களின் அறிவியல் ஆராய்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் முதல் தேசிய நிறுவனமாக 1876 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் மகேந்திரலால் சர்க்கார் என்பவரால் IACS நிறுவப்பட்டது.